உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, வரும் 26ம் தேதி மீண்டும் தமிழகம் வர உள்ளார். கடந்த மாதம், 26ம் தேதி இரவு துாத்துக்குடி வந்து, அம்மாவட்ட விமான நிலை யத்தின் புதிய முனையத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். மேலும், நெடுஞ்சாலை, ரயில்வே உட்பட பல்வேறு துறைகளின் திட்ட பணிகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அன்றிரவு, திருச்சி சென்ற மோடி, அடுத்த நாள் அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்த ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்றார். மீண்டும் வரும், 26ம் தேதி, பிரதமர் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்று, அவர் கடலுார் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கும், அடுத்த நாள் திருவண்ணாமலைக்கும் செல்ல உள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து, தமிழக பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'இம்மாதத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருவதாக, டில்லி மேலிடம் தெரிவித்துள்ளது. எந்த தேதி என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை; மோடி வருகை தொடர்பான உறுதியான தகவல், இந்த வார இறுதியில் தெரியவரும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Anand
ஆக 06, 2025 11:23

அப்படியானால் மறுபடியும் அப்பல்லோவிற்க்கா? இந்த தடவை கிட்னி.


Amsi Ramesh
ஆக 06, 2025 10:08

போன முறை விடியல் அப்பல்லோவில் போய் மறைந்து கொண்டார் இந்தமுறை எங்கோ


Mario
ஆக 06, 2025 09:38

14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு மீண்டும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19% ஆக இருக்கும் என மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அதாவது தமிழ்நாடு அரசு கணித்த 9 சதவிகித வளர்ச்சியை விட அதிக வளர்ச்சியை தமிழ்நாடு பதிவு செய்து சாதனை படைக்க உள்ளது.


Priyan Vadanad
ஆக 06, 2025 09:29

வேற வேலையே இல்லையான்னு பலர் கேட்கிறாரகள்.


vivek
ஆக 06, 2025 14:57

பிரியனுக்கு குசும்பு...நீ திராவிட தலையை கேட்கிறே


Natarajan Ramanathan
ஆக 06, 2025 09:12

இப்படி அடிக்கடி வந்தால் இங்கே உள்ள நோஞ்சான் பேசாமல் மெரினாவில் போய் படுத்துவிடும்.


அப்பாவி
ஆக 06, 2025 07:48

நடராஜருக்கும், அண்ணானலையாருக்கும் பெரிய்ய்ய்ய சிலை வைக்கும் திட்டம் இருக்காம். அப்ப்ய்றம் 1000 ரூவா தபால்தலையும் வெளியிடும் திட்டமும் பரிசீலனையில் இருக்காம். திருவண்ணாமலை டு சிதம்பரம் வந்தே பாரத்தும் கொடியசைக்கப் படுமாம்.


மணியன்
ஆக 06, 2025 10:02

அப்பாவி,பாமரர்கள் பெயரை ஒளித்து தலா 200 பெற்று பெருவாழ்வு வாழ்க.


பாமரன்
ஆக 06, 2025 07:32

இப்போல்லாம் பெரிய ஜி டூர்ஸ் பத்தி யாரும் சீரியஸா எடுத்துக்கறதில்லை... இன்னும் கூலி வாங்கும் சிலதுக சேம்பரம் மற்றும் அண்ணாமல கோயில்களை இவர் விசிட் மூலம் ஒலக லெவலுக்கு கொண்டாந்ததா சொல்லுங்க... அத நினச்சாதான் கிலியா கீதுபா... எப்படியும் ஒரு பாஞ்சு கிலோமீட்டர் பேட்ச் டோல் ரோடு கிடைக்காதா கொடியாட்ட... அரசு விழான்னு சொல்லிடுவோம்ல....


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 06, 2025 08:57

பெரிய அப்பா ஆஸ்பத்திரிக்கு போனாலும் யாரும் சீரியஸா எடுத்துக்கமாட்டாங்க. இன்னும் 200 ரூவா குவாட்டர் பிரியாணி வாங்கும் சிலதுக கொளத்தூரு திருநெல்வேலி ஒலக லெவலுக்கு கொண்டாந்தா பெருமை பேசிக்குவாங்க அது நினைச்சா தான் கிலீயா கீதுபா எப்படியும் ஒரு பத்து பாஞ்சு கிலோமீட்டர் ஸ்கிரீன் துணி கட்டி கொண்டாடிருவோம்ல அரசு விழான்னு பேரு வச்சு கின்னு கட்சிக்கு புதுசா நல்ல அடிமைகளை பிடிச்சுருவோம்ல.


vivek
ஆக 06, 2025 14:54

உனக்கு நல்ல அறிவாளியின் பெயர் வைக்காமல் பாமரன் என்ற பெயரை பொருத்தமாக வைத்துள்ளார்கள்...படிக்காத பாமரன் என்று வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்


Appan
ஆக 06, 2025 07:21

மோடியின் கங்கை கொண்ட சோழபுரம் விழா , அவரை மிகவும் கவர்ந்து விட்டது. போகும் இடம் எல்லாம் ஒரே கங்கை கொண்ட சோழபுறம், சிவா பெருமை தான் ..ராஜேந்திர சோழன் கங்கை நீரை கொண்டு வந்து பூஜை செய்தானாம். அதே போல் மோடியும் கங்கை நீரை கொண்டுவந்து பூஜை செய்தாராம் ..தமிழர்கள் இதை வர வேற்கிறோம் . ஆனால் இந்த சனாதானம் ,இந்தி என்றால் வர வேர்க்க மாட்டோம் . மோடி பிரமச்சாரி அதனால் சிறந்த சிவா பக்தன் . தமிழகம் ஒரு சிவா ஒரு பூமி . மோடியை பெருமையுடன் வரவேற்போம் . எப்போது ?. இந்த சனாதானம் , இந்தி இல்லாமல் வரணும்.


சிவராமகிருஷ்ணன்
ஆக 06, 2025 06:58

இந்த தடவையும் ஒருத்தர ஆஸ்பிட்டல் செக்கப் போய் விடுவாரா?


சுந்தர்
ஆக 06, 2025 06:54

பஞ்ச பூத தலங்களில் ஆகாஷ் மற்றும் அக்னி கோயில்களுக்கு செல்லும் பிரதமர். யாருக்கு அக்னியோ?