உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாக்.,கிற்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி: நயினார்

பாக்.,கிற்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி: நயினார்

ஓசூர்: ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' என, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று மாலை, 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றிக்கு பாடுபட்ட முப்படை ராணுவ வீரர்கள் மற்றும் பிரதமர் மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில், கொட்டும் மழையில் நடந்த மூவர்ணக்கொடி பேரணியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஹிந்து மத கலாசாரப்படி, வீட்டில் ஒருவர் இறந்து விட்டால், 16வது நாள் காரியம் செய்வோம். பஹல்காம் சம்பவம் நடந்து 16 நாட்கள் கழித்து பாகிஸ்தானுக்கு காரியம் செய்த மாவீரன் தான் பிரதமர் மோடி. மேலும், 90 நிமிடங்களில், 9 இடங்களை வெடிகுண்டு வைத்து தகர்த்தது நம் ராணுவம். நிமிர்ந்தது நம் கவுரவம். நம், 'பிரமோஸ்' ஏவுகணையை வாங்க, 16 நாடுகள் ஒப்பந்தம் செய்து கையெழுத்திட்டுள்ளன. அப்படியானால் நம் ராணுவம், ராணுவ தளவாடங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை பாருங்கள். அதைவிட சக்தி வாய்ந்தவர் பிரதமர் மோடி.இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.

ஒன்றுபட்ட இந்தியர்கள்

பஹல்காம் தாக்குதல், ஒவ்வொரு இந்தியரின் நெஞ்சத்தையும் உலுக்கியது. அப்பாவி பொதுமக்கள், 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மதத்தின் அடிப்படையில், அந்த படுகொலை நடந்தது. இந்தியாவில் ஹிந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே, ஒரு விஷமத்தனமான பிரச்னையை உருவாக்கி, நாட்டிற்குள் பிரச்னையை உருவாக்க வேண்டும் என்பது பயங்கரவாதிகள் நோக்கம். அதை முறியடித்து, இந்தியர்களாக ஒன்றுபட்டுள்ளோம். பிரதமர் மோடி முப்படைக்கும் முழு சுதந்திரத்தை அளித்தார். பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவின் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. -அண்ணாமலைமுன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Oviya Vijay
மே 18, 2025 12:04

2026 தேர்தல் முடிவு வரும் நாளில் தமிழகத்தில் பிஜேபிக்கும் அதிமுகவுக்கும் மக்கள் முடித்திருப்பர்...


pmsamy
மே 18, 2025 09:01

போர் என்பது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது அதை அரசியலாக்குவது அநாகரிகம்


ஆரூர் ரங்
மே 18, 2025 11:49

மும்பைத் தாக்குதல் நடந்தவுடன் மன்மோகன் அரசு எவ்வித எதிர்த்தாக்குதல் நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ராணுவம் தானாக எதாவது செய்ய முடிந்ததா? போர் பற்றிய நடவடிக்கையை ராணுவம் நடத்தினாலும் எங்கே எப்போது என்பதை முடிவெடுத்துக் கொடுக்கும் அரசுதான் முதற்கண் பாராட்டப்பட வேண்டும்.


pmsamy
மே 18, 2025 08:41

ஆப்ரேஷன் சிந்து பாஜகவுக்கு கிடைத்த வெற்றி இல்லை இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி அப்படி பேசி பழக வேண்டும்


ஆரூர் ரங்
மே 18, 2025 11:52

சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தால் காவல்துறை அமைச்சரான முதல்வரைப் பாராட்ட வேண்டும். ஆனால் ராணுவம் வெளியுறவுத்துறையை சிறப்பாகக் கையாண்டால் பிரதமரை பாராட்டக் கூடாதா? என்னங்க உங்க நியாயம்?


Kasimani Baskaran
மே 18, 2025 07:13

சீன எதிர்ப்புக்காக ஆக்கிரமித்த காஷ்மீரை அமெரிக்கா விழுங்கும் முன் இந்தியா சுதாரித்துக்கொண்டு மீட்கவேண்டும். ஏற்கனவே மியான்மரில் புது நாடு உருவாக்க முயல்கிறார்கள். அமேரிக்கா இந்தியாவின் எதிர்ப்பு நாடுதான். சீனா அமெரிக்காவை விழுங்கிவிட்டது இன்னும் அவர்களுக்கு புரியவில்லை.


Oviya Vijay
மே 18, 2025 07:01

தேர்தல் முடிவு வரும் நாளில் நீங்கள் அதைக் கண்ணாரக் காண்பீர்கள்.


Mani . V
மே 18, 2025 04:30

அட போய்யா தமிழகத்தில் நடக்கும் குடும்ப கொடுங்கோல் ஆட்சிக்கு காரியம் செய்ய முடியவில்லை, பெருசா பேச வந்துட்டாரு. ஊழல் பேர்வழி கருணாநிதி என்னமோ சுதந்திரப் போராட்ட தியாகி மாதிரி அனைத்திற்கும் அந்த ஊழல்வாதி பெயரை வைத்து கொலையாய் கொல்கிறான்கள்.


புதிய வீடியோ