உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமரின் சூரிய வீடு திட்டம்: கூடுதல் மானியம் எதிர்பார்ப்பு

பிரதமரின் சூரிய வீடு திட்டம்: கூடுதல் மானியம் எதிர்பார்ப்பு

திருப்பூர் : பிரதமரின் சூரிய வீடு இலவச மின் திட்டத்தில் மத்திய அரசு மானியம் வழங்குகிறது. சோலார் அமைக்க அதிக செலவாகும் நிலையில், தமிழக அரசும் மானியம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்பில், வீடுகளில் சோலார் மின் பயன்பாட்டை ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவ்வகையில், தமிழக மின்வாரியம் வாயிலாக தற்போது பகுதிவாரியாக இது குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.உரிய பகுதி மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களில் மின் வாரியத்தினர், வங்கியாளர் மற்றும் சோலார் நிறுவனத்தினர் பங்கேற்று மின் நுகர்வோருக்கு இதுகுறித்து விளக்கி, சூரிய வீடு இலவச மின் திட்டத்துக்கு விண்ணப்பிக்க வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இது குறித்து மின்நுகர்வோர் கூறியதாவது: இத்திட்டத்தில் வீடுகளில் ஒரு கிலோ வாட் சோலார் அமைக்க, 30 ஆயிரம், 2 கிலோ வாட்க்கு, 60 ஆயிரம் ரூபாய் மற்றும், 3 கிலோ வாட் முதல், 78 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. சோலார் பேனல் அமைக்க வங்கி கடனும் வழங்கப்படுகிறது. இதில், 400 யூனிட் வரை பயன்படுத்தும் வீட்டு மின் இணைப்பில், 919 ரூபாய். 500 யூனிட் வரை 1,243 ரூபாய் மற்றும் 600 யூனிட்க்கு 1,495 ரூபாய் வரை மின் கட்டணத்தில் சேமிப்பாகிறது. இரண்டு மாதத்துக்கு, 1,500 ரூபாய் என்றாலும், ஆண்டுதோறும், 9 ஆயிரம் ரூபாய் சேமிப்பாகிறது. அவ்வகையில் குறைந்த பட்சம் ஒரு கிலோ வாட் திறனுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவிட்டு சோலார் பேனல் அமைத்தாலும், 30 ஆயிரம் ரூபாய் மானியம் போக மீதமுள்ள, 70 ஆயிரம் ரூபாய் சேமிக்க ஏறத்தாழ, 10 ஆண்டுகளாகி விடும். இது நடுத்தர குடும்பங்களுக்கு பெரிய அளவில் பயன் தருவது சந்தேகம். மிக அதிகளவில் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகள் மற்றும் தொழிற்சாலை பயன்பாடுகளுக்கு ஏதுவாக இருக்கும். ஆனால், சோலார் மின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு வழங்கும், 30 சதவீத மானியத்துடன் மாநில அரசும், 30 சதவீதம் சேர்த்து வழங்கினால் அனைத்து மின் நுகர்வோரும் இதில் பயன் பெற முன் வருவர். தமிழக அரசு இது குறித்து ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

R Dhasarathan
அக் 01, 2025 13:26

நெட் மீட்டர் காலம் தாழ்த்தாமல் லஞ்சம் வாங்காமல் கொடுத்தாலே போதும்....


நிக்கோல்தாம்சன்
அக் 01, 2025 10:47

மின்சாரம் திருடும் மக்களிடம் இது செல்லுபடியாகாது. மீண்டும் எழுதுகிறேன் விவசாயிகளில் எனது நண்பர் சஞ்சீவி போல எல்லாரும் முயன்றால் தானாக நாம் தன்னிறைவு பெற்றுவிடுவோம். அவரது யூடுபே "farm techtube" என்று இருக்கும் அதில் அவரது முயற்சிகளை எல்லாம் போட்டுக்கொண்டே வருகிறார் . பாருங்களேன்


திகழ் ஓவியன்
அக் 01, 2025 10:09

சரியான உண்மையான கட்டுரை...


raju
அக் 01, 2025 09:19

முதலில் மாதம் ஒரு முறை மின்சார கணக்கு எடுத்தாலே மின் கட்டணம் பாதி குறையும். இதில் வேறு தமிழக அரசு மானியம் என்பது போகாத ஊருக்கு வழி கேட்பது போல. அவர்களிடம் அவ்வளவு பெரிய மனசும் இல்லை, நிதி ஆதாரம் பற்றின திட்டமும் கிடையாது என்பது உண்மை.


சமீபத்திய செய்தி