உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் வழி கல்வி படித்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை: புதிய அரசாணை வெளியீடு

தமிழ் வழி கல்வி படித்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை: புதிய அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கான, வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்து, புதிய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில், தமிழ் வழி கல்வியில் படித்தவர்களுக்கு, வேலை வாய்ப்பில், 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்க, 2010 முதல், பல்வேறு அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியாகியுள்ளன. அவற்றில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, சில திருத்தங்கள் செய்து, தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம், புதிய அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: * முதல் வகுப்பில் பள்ளியில் சேராமல், கல்வி உரிமை சட்டம் வயதின் அடிப்படையில், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை, நேரடியாக பள்ளியில் சேர்ந்து, தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்றவர்களும், பிற மாநிலங்களில் தமிழ் வழியில் படித்து, பின் தமிழகத்தில் தொடர்ந்து, தமிழ் வழியில் படித்தவர்களுக்கும், பணி முன்னுரிமைக்கு தகுதி உண்டு* பள்ளியில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று, பணியில் இருந்த தலைமை ஆசிரியர்களும், உயர்கல்வியில் தொழிற் பயிற்சி நிலையம், கல்லுாரி, பல்கலைகளின் பணியில் இருந்த முதல்வர், பதிவாளர்களின் சான்றின் அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும்* பள்ளியில் நேரடியாக 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2, தமிழ் வழியில் தேர்வெழுதி, அவற்றில் தேர்ச்சி பெறாமல், தனித்தேர்வராக தேர்வெழுதி தேர்ச்சி பெற்று, மீண்டும், பள்ளி, கல்லுாரிகளில் தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை உண்டு* பள்ளி, கல்லுாரியில் இருந்து பெற்ற மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் உள்ளிட்டவற்றின் உண்மை தன்மையை, பணியாளர் தேர்வு முகமைகள், பணி நியமன அதிகாரிகள், அந்தந்த பள்ளி, கல்லுாரிகளின் வாயிலாக உறுதி செய்ய வேண்டும் * பள்ளிகள் மூடப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலரிடம்; கல்லுாரிகள் மூடப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட பல்கலை பதிவாளரிடம், தமிழ் வழி படிப்புக்கான சான்றிதழை பெற்று சமர்ப்பிக்க வேண்டும் * பள்ளி, கல்லுாரிகளில், தமிழ் பாடம் நடத்தும் ஆசிரியராக, தமிழ் இலக்கியத்தில் கல்வித் தகுதி பெற்றவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.

தகுதி இல்லை

* தேர்வை மட்டும் தமிழ் வழியில் எழுதி, வேறு பயிற்று மொழிகளில் படித்தவர்கள்; பள்ளிக்கு செல்லாமல், தனித் தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்வெழுதி, தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர், இச்சலுகையை பெற இயலாது* தமிழ் பாடத்தையும், வேறு பாடத்தையும் 'கிராஸ் மேஜர்' முறையில் படித்தவர்களுக்கு, பள்ளி, கல்லுாரிகளில் தமிழ் பாடம் நடத்தும் ஆசிரியர் ஆக தகுதி கிடையாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Barakat Ali
ஏப் 19, 2025 13:06

தமிழுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் திராவிட மாடலுக்கு, தமிழர்களை குடி மற்றும் இன்னபிற போதைக்கு அடிமையாக்கிய திராவிட மாடலுக்கு தமிழ், தமிழர் எது அவ்வளவு அக்கறையா ???? நம்பிட்டேன் .... நீங்களும் நம்பிடுங்க .... இல்லன்னா துரோகி பட்டம் கிடைக்கும் ....


ஆரூர் ரங்
ஏப் 19, 2025 12:01

இது நமது அமைச்சர்களுக்கும் பொருந்துமா? கல்லூரி வரை தமிழ்வழிக் கல்வி பயின்ற ஒரு அமைச்சராவது உள்ளாரா? ஆனா பள்ளியிறுதி கூட தாண்டாத பலர் முக்கிய இலாக்கா அமைச்சர்கள்.


sankaranarayanan
ஏப் 19, 2025 11:39

இப்படியே மொழிவாரியாக ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநில மொழிக்கு முன்னிருமை கொடுத்து வேலை வாய்ப்புகள் கொடுக்க துவங்கினால் நாடு காடாகிவிடும் பிறகு தேச ஒன்றுமே இருக்கவே இருக்காது வேலைவாய்ப்புகள் குறைந்தது இங்கேயே சுழல வேண்டியதுதான்


baala
ஏப் 19, 2025 09:56

இங்கு காசுக்காக கூவும் நபர்கள் அதிகம் போல தெரிகிறது.


baala
ஏப் 19, 2025 09:56

அருமை.


தமிழ்வேள்
ஏப் 19, 2025 09:11

தமிழக கல்லூரிகளில் தமிழ் வகுப்புகள் என்பவை பெரிய கேலிக்கூத்து..வேறு துறைகளில் இடம் கிடையாது என்று மறுக்க பட்டவன் லோக்கல் தறுதலைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கும் தமிழ் துறை எந்த லட்சணத்தில் இருக்கும்? சைவ சித்தாந்தம் வைணவ இலக்கியம் ஜைன தத்துவம் பாடமாக இல்லாத தமிழ் கல்வி வேஸ்ட்..


தமிழ்வேள்
ஏப் 19, 2025 09:07

அண்ணாதுரையின் அந்தரங்க லீலைகளை பாடமாக படித்த திராவிடன் அரசுப் பணியில் சேர்ந்து என்னசெய்வான்? அண்ணாதுரை லீலைகளை முன்னெடுப்பானா ?


பாமரன்
ஏப் 19, 2025 07:58

ஸாரு...நானூ இஸ்டேட்டு பாங்கு மெயினு புராஞ்சில இருந்து பேசுது... ஒங்க ஏடிஎம் கார்டுல பதினாறு நம்பர் சொலாலு ஸார்.. பிலாக்கு ஆகிடும்.... அப்பிடிங்கிற வடக்கன்ஸ் தான் மெய்யாலுமே கஷ்டப்பட்டு தமிழ் படிச்சவங்க... கல்வி அறிவு அதிகமாகிட்ட தமிழகத்தில் அவங்ககிட்ட இப்பல்லாம் யாரும் அதிகம் ஏமாறுவதில்லைன்னு தொழிலுக்கு ரெம்ம்ம்ம்ம்ப கஷ்டப்படுவதால... அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை கொடுக்கனும் பகோடா பிரியர்கள் சார்பாக இமயமலை பொந்துல இருந்து கேட்டுக்கறேன்...


guna
ஏப் 19, 2025 11:44

22 மார்க் எடுத்த தலைவருக்கு எத்த சொம்பு பகோடா...ஹி..ஹி...


தாமரை மலர்கிறது
ஏப் 19, 2025 07:17

தமிழ்வழி படித்தவருக்கு தான் வேலை என்பது ரொம்பவும் முட்டாள்தனமான சட்டம். எடப்பாடி முதல் ஆனவுடன், ஓபிஎஸ் கொண்டு வந்த பிறமாநிலத்தோரும் தமிழக அரசு வேலைக்கு அணுகலாம் என்று பழைய சட்டம் கொண்டுவரப்படும்.


பாமரன்
ஏப் 19, 2025 08:58

பயபுள்ள எப்படி கோத்து உடுது பாரேன்... என்ன நான் சொல்றது


Kasimani Baskaran
ஏப் 19, 2025 06:40

திராவிடர்களுக்கு தமிழுக்கும் என்ன சம்பந்தம்.. ஒன்றில் இருந்து பத்தாயிரம் வரை ஒருவருக்கு தமிழில் என்னதெரிந்து இருக்கும் பட்சத்தில் அவரை தமிழன் என்று ஏற்றுக்கொண்டு முன்னுரிமை கொடுக்கலாம்.


பாமரன்
ஏப் 19, 2025 08:02

நம்ம கம்பெனிக்கும் தமிழ் நாட்டுக்கும் என்ன சம்பந்தம் காசி...??? இருந்தாலும் நோட்டா கூட இவ்ளோ நாளாக போராடலையா இங்கே...??? அல்லது இங்கே கொள்ளையடிக்கரவனுககிட்ட கறாராக பங்கை வாங்கிக்கலையா...??


முக்கிய வீடியோ