உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை:பணி மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள, கல்லுாரி கல்வி இணை இயக்குநர் அலுவலகம் முன், பல்கலை ஆசிரியர் சங்கம் மற்றும் 'மூட்டா' எனும், மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரேசா, அழகப்பா பல்கலை ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து, 'மூட்டா'வின் செயலர் செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது: அரசு உதவிபெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு, 10 ஆண்டுகள் பணி முடித்ததும், பணி மேம்பாடு ஆணை வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த நான்காண்டுகளாக பணி மேம்பாட்டுக்கான ஊதிய உயர்வு வழங்கவில்லை. நிலுவையுடன், ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி