உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனுமதியின்றி போராட்டம்; அண்ணாமலை மீது வழக்கு

அனுமதியின்றி போராட்டம்; அண்ணாமலை மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உட்பட 1,077 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.'டாஸ்மாக்' நிறுவனத்திற்கு மதுபானங்கள் கொள்முதல் செய்ததில், 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பதாக, அமலாக்கத் துறை கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசை கண்டித்து தமிழக பா.ஜ., சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.இப்போராட்டத்தில் பங்கேற்க வீட்டில் இருந்து புறப்பட்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, முன்னாள் கவர்னர் தமிழிசை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். எழும்பூர் ராஜரதத்தினம் ஸ்டேடியம் முன் திரண்ட பா.ஜ., மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு, பல மணி நேரத்திற்கு பின் விடுவிக்கப்பட்டனர். சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, அண்ணாமலை உள்ளிட்ட 1,077 பா.ஜ.,வினர் மீது, போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

கொங்கு தமிழன் பிரசாந்த்
மார் 19, 2025 17:05

ஆட்டுக்குட்டி முட்டை இட்டு கோழி குட்டி வந்ததுன்னு யானகுஞ்சு சொல்லக்கேட்டு பூனைகுஞ்சு சொன்னதுண்டு கதை இல்ல சாமி இப்போ காணுது பூமி இதுமட்டும்தானா இன்னும் இருக்குது சாமி!!


Subramanian
மார் 19, 2025 16:22

pmsamy தான் பைத்தியம் போல் உளறுகிறார். காவல்துறை அனுமதி மறுக்கபட்டுள்ளது. ஒவ்வொருமுறையும் மறுக்கபடுவதும் நீதிமன்றம் அனுகுவதுவும் சகஜமாகிவிட்டது.


N Sasikumar Yadhav
மார் 19, 2025 14:17

அனுமதி கேட்டால் கொடுத்துவிட்டுதான் மறுவேலை பார்க்கும்


pmsamy
மார் 19, 2025 10:49

பைத்தியக்காரன் மாதிரி பேசுறான் அண்ணாமலை .போராட்டத்திற்கு அனுமதி வாங்கணும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லை இதெல்லாம் எங்க உருப்பட போகுது


N Sasikumar Yadhav
மார் 19, 2025 14:20

ஓசியும் இலவசமும் வாங்கிக் கொண்டு விஞ்ஞானரீதியான ஊழல்வாதிகளான திராவிட கட்சிகளுக்கு ஓட்டுப்போடும் நீங்க நன்றாக இருக்கும்போது நாட்டில் ஊழலே இருக்க கூடாதென விரும்பும் அண்ணாமலை மிக நன்றாக இருப்பார்


S. Neelakanta Pillai
மார் 19, 2025 14:27

காவல்துறை ஆட்சியாளர்களின் அடியாள் மாதிரி செயல்பட்டால்.....


vivek
மார் 19, 2025 16:45

சமச்சீர் கொத்தடிமை நீ போலி pmsamy


Kannan
மார் 19, 2025 19:28

இதுவரை தொடர்ந்து ஏழு முறை போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.


N.Purushothaman
மார் 19, 2025 06:43

இந்த ஆட்சியில் காவல்துறை ஏவல் துறையாகி கண்ணியம் இழந்து உள்ளது ....சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்கு சென்று உள்ளது ...போதை பொருள் புழக்கம் வரலாறு காணாத அளவிற்கு அணைத்து தரப்பினரிடமும் சென்றடைந்து உள்ளது ....அதை எல்லாம் முறியடிக்காமல் அரசியல் கட்சியினர் பின் சென்று கொண்டு இருக்கிறார்கள் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை