உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களின் நண்பன் என்பதை நிரூபியுங்கள்: போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

மக்களின் நண்பன் என்பதை நிரூபியுங்கள்: போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''போலீஸ் பொதுமக்களின் நண்பன் என்று சொல்வது வெறும் வார்த்தையாக இல்லாமல், உண்மை என்று நிரூபிக்க வேண்டும்,'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்ற உங்களது கனவும், முயற்சியும், உழைப்பும் சேர்ந்து தான் உங்களை பணியில் சேர வைத்துள்ளது. இனிமேல்தான் உங்களுக்கு பொறுப்பும், சமூக கடமையும் அதிகமாக இருப்பதை அனைவரும் உணர வேண்டும். போலீஸ் இருக்காங்க; அவங்க நம்மை பார்த்துக்குவாங்க என்ற நம்பிக்கையில் தான் மக்கள் வாழ்கிறார்கள்.

அமைதிப் பூங்கா

இரவு நேரங்களிலும் பெண்கள் பாதுகாப்பாக வேலைக்கு சென்று வருகிறார்கள். தமிழகம் பாதுகாப்பான மாநிலம்; அமைதிப் பூங்கா என இந்தியா முழுவதும் எல்லோரும் சொல்கிறார்கள். இந்தியாவிலேயே முதலீடுகளை மேற்கொள்ள சிறந்த மாநிலமாக தமிழகம் இருப்பதால், உலகளாவிய பெரும் நிறுவனங்கள் தமிழகத்தை நாடி வருகின்றன. அந்த நம்பிக்கையை நாம் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும். தமிழகத்தின் எதிர்காலம் போலீஸ் துறையில் பணியாற்றுவர்களின் கைகளின் தான் உள்ளது என்ற பொறுப்புணர்வு , உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

ரியாலிட்டி

போலீஸ் பணி மனித நேயத்துடன் இணைந்தது. வீரத்தின் அடித்தளம் ஏது தெரியுமா? அன்பு தான். இன்னொரு பக்கம் எங்கேயோ ஒரு போலீஸ் தவறு செய்தாலும் ஒட்டுமொத்த துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பாதிக்கும். அதனை உணர்ந்து நீங்கள் ஒவ்வொரு வரும் கவனமாக செயல்பட வேண்டும். நீங்கள் செயல்படுவீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். போலீஸ் பொதுமக்களின் நண்பன் என்று சொல்வது வெறும் வார்த்தையாக இல்லாமல், வெறும் வாசகங்களாக இல்லாமல், உண்மையில் அதனை நிரூபிக்க வேண்டும். போலீசார் அனைவரும் மக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் உறுதி செய்கிற வேலையில் தெரிய வேண்டும்.

ஜாக்கிரதை

இரும்பு கரத்தை குற்றங்களை தடுப்பதற்கு பயன்படுத்த வேண்டும். புகார் கொடுக்க வருபவர்களிடம் மரியாதை, புன்னகை, அக்கறையை காண்பிக்க வேண்டும். இந்த குணங்களை காட்டுங்கள். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் போது, மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.

100% உத்தரவு

இந்த துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வராக, இது என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல, 100 சதவீதம் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய உத்தரவு. அதேபோல், போதைப்பொருட்கள் நடமாட்டம், அதன் விற்பனையை தடுப்பதிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் எல்லோரு வீட்டிலும் குழந்தை இருப்பார்கள். யார் பாதிக்கப்பட்டாலும் போதையின் ஆபத்து நம்ம வீட்டு குழந்தைகளையும் பாதிக்கும் என்பதை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும். நான் இன்சார்ஜ் ஆக இருக்க கூடிய பகுதியில், என்னை மீறி ஒரு குற்றச்சம்பவங்களையும் நடக்க விட மாட்டேன் என்று நீங்கள் ஒவ்வொரும் தீர்மானம் எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Keerthi
ஜன 04, 2026 01:04

ரவுடிகளை விட மோசமானவனுங்க பல பேர் இருக்கானுங்க. எலும்பு துண்டு விரும்பிகள்.


T.Senthilsigamani
ஜன 03, 2026 17:51

மக்களின் நண்பன் என்பதை நிரூபியுங்கள்: போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்.சபாஷ் முதல்வர் அவர்களே இத்தனை நாலரை ஆண்டுகாலமாக திமுக அமைச்சர் ,எம் பி ,எம் எல் ஏ , திமுக மாவட்டம் ,திமுக வட்டம் ,திமுக நகர , திமுக வார்டு ,திமுக பஞ்சாயத்து கவுன்சில் உறுப்பினர்களுக்கு சுருக்கமாக சொன்னால் திமுக உடன்பிறப்புகளுக்கு ,உற்ற நண்பனாக / தோழனாக /நேசனாக/ நிரூபித்த போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் போதும் போதும் போதும் இனியாவது ,இனி வரும் ஒன்றிரண்டு மாதமாவது பொது மக்களின் நண்பனாக நிரூபிக்க சொல்லியிருக்கிறார் .ஹா ஹா ஹா இது திராவிட மாடல் அல்ல துக்ளக் மாடல் ஆட்சி இது அஷ்ட கோணல் ஆட்சி .திமுக தமிழகத்தில் ஆட்சி பீடம் ஏறியபோது சொல்ல வேண்டியதை ஆட்சி பீடம் காலி செய்யும் போது தலைகீழாக சொல்கிறார் .வாழ்க ஏமாற்று திராவிடம்


V RAMASWAMY
ஜன 03, 2026 17:40

தேர்தல் சமயத்தில் தான் பசப்பாக இவ்வாறு சொல்லத்தோனுதோ? உங்கள் நண்பன் சாயம் வெளுத்து ரொம்ப நாளாகிவிட்டதுங்கோ.


Barakat Ali
ஜன 03, 2026 16:51

நீங்க எப்படி ன்னு கேட்டுடப் போறாங்க .....


ஈசன்
ஜன 03, 2026 15:24

தேர்தல் தேதி இன்னும் இரண்டு மாதங்களில் அறிவித்து விடுவார்கள். பின்பு மாநிலத்தின் பெரும்பான்மையான இயக்கம் தேர்தல் ஆணையத்தின் கட்டுபாட்டுக்குள் போய் விடும். இரண்டு மாதங்களுக்குள் எப்படி மக்களிடம் நல்ல பெயர் வாங்க முடியும். அது போகட்டும். மக்களின் நண்பன் என்று இனிதான் பெயர் வாங்க வேண்டும் என்றால் இதுவரை காவல் துறை மக்களின் எதிரிகளாக இருந்தார்களா! காவல் துறையின் மாண்பை குறைக்கிறார் முதல்வர்.


Prem
ஜன 03, 2026 14:51

அய்யா முதல்வர் அவர்களே, வண்டலூர், மறைமலை நகர் , பரணூர் என்று ஒரு இடம் இல்லமால் கை நீட்டி வாங்கி, நடை பாதை கடைகளில் கை ஏந்தி மரியாதையை குறைத்துக் கொள்கின்றனர் ...


HoneyBee
ஜன 03, 2026 14:49

கொஞ்சம் அவரை தூக்கத்தில் இருந்து யாராவது எழுப்புங்க. அமைதி பூங்கான்னு ஒளரிட்டு ..


சத்யநாராயணன்
ஜன 03, 2026 14:44

துண்டு சீட்டு ஸ்டாலின் உத்தரவு போட்டு விட்டார் அல்லவா இனி நீங்கள் உங்களை சுத்தமாக்கிக் கொள்ள போலீஸ் நண்பர்களுக்கு எனது வேண்டுகோள் இத்தனை காலம் உங்களை அடிமை நாய்களைப் போல நடத்திய இந்த திருட்டு திமுக கும்பலை ஒருவர் விடாமல் என்கவுண்டரில் போட்டு தள்ளுங்கள் நாடும் சுத்தமாகும் உங்களுக்கும் மன நிறைவு வரும்


V Venkatachalam, Chennai-87
ஜன 03, 2026 13:07

இட் இஸ் ஓபன் கமாண்ட். தி மு க வின் நண்பன் என்பதை ஓபனாக பதிய வைக்காதீர்கள்.


Sivakumar
ஜன 03, 2026 13:07

Innumaa Pechai Nambukireerkal? Vedikkai Nanbarae! Inge Yaarukkum Vetkamillai!!


முக்கிய வீடியோ