உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேறு நோய்களும் இருந்தால் கொரோனா மரணமாக கருத முடியாது

வேறு நோய்களும் இருந்தால் கொரோனா மரணமாக கருத முடியாது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''இணை நோயால் பாதிக்கப்பட்டோர் உயிரிழந்தால், அவர்களின் இறப்பை கொரோனா பாதித்ததால் இறந்ததாக கருத முடியாது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில், 100க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி, சிகிச்சை பெற்று வருகின்றனர்.கண்காணிப்புஇணை நோயால் பாதிக்கப்பட்ட இருவர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இணை நோய்களால் பாதிக்கப்பட்டோர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் இறந்தாலும், அதை கொரோனா இறப்பாக கருத முடியாது என, மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.இது குறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:கொரோனா பாதிப்புகள் குறித்து பெரிய அளவில் பயப்பட வேண்டியதில்லை. தமிழகத்தில், 216 பேர் கண்காணிப்பில் உள்ளனர். மூன்று நாட்களில் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு, பின் குணமடைந்து வருகின்றனர். கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை, அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலர்கள் கண்காணிக்கின்றனர்.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போர், வயது மூத்தவர்கள், இணை நோய் பாதிப்பு இருப்பவர்கள், பொது இடங்களுக்கு செல்லும்போது, நோய் பாதிப்பு உள்ளவர்கள் இருமினாலோ, தும்மினாலோ, அவர்களின் எச்சில் துகள் விழுந்தால், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.பொது இடங்கள்எனவே, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்படி, பொது இடங்களுக்கு செல்லும் கர்ப்பிணியர், வயது மூத்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இணை நோயாளிகள், முகக் கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவிக் கொள்வது நல்லது.இணை நோய் உள்ளவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில், கொரோனா பேக்கேஜ் உள்ளடக்கிய பரிசோதனை செய்யப்படுகிறது.இணை நோயால் பாதிக்கப்பட்டோர் இறக்கும் சமயத்தில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் மரணம் கொரோனா இறப்பாக கருதப்படாது. முதன்மை காரணமான, இணை நோயாளிகள் உயிரிழப்பு பட்டியலில் தான் சேர்க்கப்படும்.இவ்வாறு அவர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Karthik
ஜூன் 05, 2025 16:48

இன்றைய காலகட்டத்தில் ஆயிரம் பேர்ல எத்தனை பேரு எந்தவித நோய் நொடியும் இல்லாமல் ஆரோக்கியமா வாழக்கூடியவங்க இருக்காங்க..?? அப்படி பார்த்தா அந்த ஆயிரம் பேருமே செத்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில பேருடைய எண்ணிக்கை மட்டும் தான் கொரோனா கணக்கா..?? சிறப்பு..


Padmasridharan
ஜூன் 05, 2025 06:04

இதற்கு முன்னாடி எப்படி இறந்தாலும் கொரோனானு சொல்லி பயமுறுத்தி முடிச்சிட்டாங்க. இப்ப கொரோனா வந்தாலும் இல்லனு சொல்றாங்க.. அது சரி இறந்தவங்க தடுப்பூசி போட்டவங்களா இல்ல போடாதவங்களா. சாமி


சமீபத்திய செய்தி