4 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி அதிகரிக்கும் நாய்க்கடி பாதிப்பு
'தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டில், 31 லட்சம் பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது' என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல இடங்களில் தெருநாய்கள் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை கடிப்பதும் அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் பரவும் ரேபிஸ் நோய் தாக்கி, பலியாவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. தமிழக அளவில், கடந்த 2022 முதல், நடப்பாண்டு வரை ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியவர்களின் விபரத்தை, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக, திருப்பூர் மாவட்டம், பொங்கலுார், தேவனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் பெற்றுள்ளார். - நமது நிருபர் -