ரம்ஜான் சிந்தனைகள் -24
நல்லதை பேசுங்கள்அப்துல்அவசரமாக வெளியே சென்றுகொண்டிருந்தான். அப்போது வாசலில் தர்மம் செய்யுங்கள் என பிச்சைக்காரர் வந்துநின்றார். வெளியே வந்த அப்துல் யோவ்... போயா..உனக்கு வேற வேலை இல்லையா என கத்தினான். இதை கேட்டு சமையல் அறையில் வெளியே வந்த அவனுடைய அம்மா டேய் முதலில் அவரிடம் மன்னிப்பு கேள் என்றார்.என்னம்மா இவரிடம் போய் மன்னிப்பு கேட்கனுமா.சொல்வதை செய் என மீண்டும் சொன்னதும் அவனும் கேட்டான்.பின்பிச்சைக்காரருக்கு பத்துரூபாய் கொடுத்தாள்அம்மா அவர் சென்றபிறகு அப்துல் ஒன்றைபுரிந்துகொள் உன்னிடம் யாராவது உதவி கேட்டால்முடிந்ததை செய். இல்லாவிட்டால் உன் சூழ்நிலையை சொல்லி இப்போது முடியாது. பிறகுவாருங்கள் என அனுப்பு.இதையே இறைவன் விரும்புவான் என்றார் அம்மாபேசும் வார்த்தை நல்லதாக இருக்க வேண்டும். அதுவும் பிறரை காயப்படுத்தாமல் பேச வேண்டும். இப்படி நல்ல வார்த்தைகள் பேசுவது கூட தர்மமே என்கிறார் நபிகள் நாயகம்.இன்று நோன்பு திறக்கும் நேரம்:மாலை 6:35 மணிநாளை நோன்புவைக்கும் நேரம்: அதிகாலை 4:55 மணி