உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரம்ஜான் சிந்தனைகள் -4

ரம்ஜான் சிந்தனைகள் -4

பொறுமையுடன் இருப்போம்

ரம்ஜான் மாதத்தில்தான் உண்மை, பொய்யை பிரித்துக்காட்டும் குர்ஆன் அருளப்பட்டது. இதில் ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்க வேண்டும் என இறைவன் ஆணையிட்டுள்ளான். வீண் இச்சையில் இருந்தும், நரகத்தில் இருந்தும் தடுக்கும் கேடயமாக நோன்பு உள்ளது. ஒழுக்கமுடன் இருப்பதால் கற்பை பாதுகாக்கிறது. எந்த தவறான செயல்களில் ஈடுபடாமல் தடுக்கிறது. சுய கட்டுப்பாடுடன் வாழ கற்றுக் கொடுக்கிறது. எப்படி என்றால்... நம் முன் உணவும், குளிர்பானமும் உள்ளது. அதை சாப்பிட வேண்டும் என எச்சில் ஊறுகிறது. இருந்தாலும் நோன்பு என்னும் கவசம் நம் மனதை தடுக்கிறது. இதனால் மனக் கட்டுப்பாடுடன் இருக்கப் பழகுவோம். இது மட்டுமல்ல. கோபம் வராமலும் பொறுமையுடன் இருக்கவும் கற்றுக் கொடுக்கிறது. இவ்வாறு மனம், உடலுக்கு பயிற்சி அளிக்கும் நோன்பை விரும்புவோம். இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:34 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 5:05 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை