வாசகர்கள் கருத்துகள் ( 15 )
தேவையே இல்லாத ஆணியை பிடுங்குகிறார் குருமூர்த்தி
ராமதாஸ் அவர்கள் இந்த முறை ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்புக்கு காரணம் வருமான வரி ரிட்டர்ன் ஃபைல் செய்வது சம்பந்தமான சந்திப்பு என்று சொல்வாரோ?
ஆடிட்டர் குருமூர்த்தி இருக்கும் வரையில் தமிழக பாஜக நோட்டோவுடன்தான் போட்டி போட வேண்டும். தங்களது காழ்புணர்ச்சியால் மாரிதாஸ் போன்றவர்களை கையில் வைத்துக் கொண்டு அண்ணாமலை என்ற ஒப்பற்ற தலைவனை ஓரம் கட்டியதுதான் ஆடிட்டர் குருமூர்த்தி செய்த மன்னிக்கமுடியாத செயல். விளங்கிடும் தமிழக பாஜக எதிர்காலம்.
இந்த சொத்து சண்டையில் அரை சதவீதம் கூட உங்கள் கட்சி தொண்டர் கும்பகோணம் இராமலிங்கம் கொலையாளியை கண்டுபிடிக்க காட்டவில்லையே.
ராமதாஸ் வீட்டிற்கு அமலாக்கத்துறையை அனுப்பிவையுங்கள். மயிலே மயிலே என்றால் இறகு போடாது. தடியெடுத்தால் தான் தலை ஆடும் .
இந்த சந்திப்பு திமுக படு படுதோல்வி அடையும் என்பதை உறுதி செய்கிறது. அதனால் தான் ஸ்டாலின் தேர்தல் வேலைகளில் அதீத சுறுசுறுப்பு காட்டுகிறார். 4 வருடம் சுருட்டிய பணத்தை ஓட்டாக மாற்ற பற்பல தகிடுதத்தம் செய்வார்கள். மக்களின் முழு கவனமும் திமுகவின் மேல் இருக்க வேண்டும். பணத்தை வாரி இறைத்து மக்களை முட்டாளாக்கி விடுவார்கள். ஜாக்கிரதை.
இந்த சந்திப்பைப் பற்றி இவர்களிடத்தில் கேட்டால் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே என்று இருவரும் சேர்ந்து உயர்ந்த மனிதன் படத்தில் வரும் பாட்டு தான் பாடிக் கொண்டிருந்தோமே தவிர வேறொன்றுமில்லை என்று தான் கூறுவார்களேயன்றி உண்மையில் என்ன பேசினார்கள் என்று இருவரும் வெளிப்படையாக சொல்லப்போவதில்லை. ஆனால் உண்மையென்னவெனில் ராமதாஸ்க்கு பிடிக்காத ஒன்றை அவரிடத்தில் வலுக்கட்டாயமாக ஒத்துக்கொள்ள வைக்க முயற்சிகள் நடக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவேளை இவர்களது முயற்சி வெற்றி பெறுமாயின், அதன் பிறகு 2026 தேர்தலில் மக்கள் மீண்டும் பிஜேபிக்கு நாமம் சூட்டுவார்களேயானால் ராமதாஸ் விஸ்வரூபம் எடுத்துவிடுவார்... அப்போது இந்த பழைய நட்பு என்றெல்லாம் கதையளக்காமல் தன்னை வேண்டா வெறுப்பாக பிஜேபியுடன் கூட்டணி வைக்க நிர்பந்தித்தார்கள் என்பதை வெளிப்படுத்துவார். காலம் பதில் சொல்லும். அதற்குள் பாமக ஓரங்கட்டப்பட்டிருக்கும்... லவ்பெல் குலுங்கி குலுங்கி ஒரு ஓரத்தில் அமர்ந்து அழுது கொண்டிருப்பார்...
ராமதாஸ் - ஆடிட்டர் குருமூர்த்தி மீண்டும் சந்திப்பு...எதற்காக. ? மதுரை வரும் எங்க பாஸ் அமித்ஷா வை ஒருமுறை நாளை சந்தித்து விடுங்களேன். கூட்டணி மற்ற விவகாரங்களை பின்னர் பேசிக்கொள்ளலாம். இது மேலிடத்து உத்தரவு என்று சொல்ல போயிருப்பார்.
நண்பேன்டா,,, பாசமழை பொழியுறாங்க,,, இத்தனை நாட்களா நட்பு நாடகம் போடலையா? தமிழ்நாட்டுல இருக்கறவங்க எல்லாம் ... நினச்சு முழம் முழமா பூவை சுத்துறாங்களா!
மேலும் தேமுதிகவையும் தங்கள் வழிக்குக் கொண்டு வருவது தான் அமித் ஷாவின் அசைன்மென்ட் என்கின்றனர். கடந்த முறை அமித்ஷா தமிழகம் வந்த போது பாமக கூட்டணியையும் உறுதி செய்வதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக ராமதாஸ் அறிக்கை விட்டு பாஜக கூட்டணி கனவில் மண்ணள்ளிப் போட்டார். இந்த நிலையில் தான் பாஜக தரப்பில் ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாஸை சந்தித்து பேசிய நிலையில் பாமகவும் கூட்டணிக்கு வரும் என்கின்றனர். மேலும் ராமதாஸ் அன்புமணி ராமதாசை மதுரை சந்திக்க வைக்கும் திட்டமும் இருக்கிறதா. இதற்கான பணிகளும் நடைபெறுகிறது. இதனை தெரிந்து கொண்ட பெரியவர் சென்னை ஓடி விட்டார்