உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., வளர அண்ணாமலை மட்டும் உழைத்தால் போதாது; ரங்கராஜ் பாண்டே

பா.ஜ., வளர அண்ணாமலை மட்டும் உழைத்தால் போதாது; ரங்கராஜ் பாண்டே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் பா.ஜ., வளர அண்ணாமலை மட்டும் உழைத்தால் போதாது. அனைத்து தொண்டர்களும் உழைக்க வேண்டும்' என்று சாணக்யா யூடியூப் சேனலின் நிறுவனர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.சாணக்யா யூடியூப் சேனலின் 6ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே.வாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சாணக்யா சேனலின் நிறுவனர் ரங்கராஜ் பாண்டே, தங்களின் நிறுவனம் கடந்து வந்த பாதை குறித்து விளக்கினார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சி குறித்த கேள்விக்கு ரங்கராஜ் பாண்டே பதிலளித்தார். அவர் கூறியதாவது:- பா.ஜ., மட்டுமல்ல, அ.தி.மு.க., நா.த.க., த.மா.கா., என எந்த கட்சியாக இருந்தாலும், தொண்டர்கள் களத்தில் இறங்கி வேலை செய்தால் மட்டுமே கட்சியை வளர்த்தெடுக்க முடியும். நாட்டின் பிரதமரான மோடி ஒரு நாளைக்கு 20 மணிநேரம் உழைக்கிறார். மோடி பிரதமர் வேட்பாளராக இருந்த போது, அப்போதைய பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கிடம், ரிப்போர்ட் கார்டு கொடுத்தார். அதில், நாடு முழுவதும் தான் எத்தனை கூட்டங்களில் கலந்து கொண்டேன் உள்ளிட்ட விபரங்கள் இருந்தது. அவரை விட கூடுதலாக அரை மணி நேரம் தொண்டர்கள் உழைத்தால், 2036க்குள் பா.ஜ., தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். தமிழகத்தில் பா.ஜ., வளர அண்ணாமலை மட்டும் உழைத்தால் போதாது. அனைத்து தொண்டர்களும் உழைக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Raja k
மார் 17, 2025 12:31

பா ஜ தமிழ்நாட்டில் வளரவே வேண்டாம், வடநாட்டில் வளர்ந்து வேர்விட்டு ஆலமரமா நிக்கும் பாஜ அங்கே என்ன செஞ்சு கிழிச்சுது, 100ரூ கூட சம்பாதிக்க வழியில்லாமல் , தென்னிந்தியா ஓடிவரும் மக்களே சாட்சி,


R.P.Anand
மார் 16, 2025 11:06

மணல் திருடனும். மலை திருடனும். டெண்டர் எடுத்து இடின்ச்சி விழர மாதிரி கட்டிடம் கட்டணும்.கட்டப்பஞ்சாயத்து பண்ணனும். பாலியல் தொல்லை தரணும். ஆள் கடதனும். கொலை கொள்ளை பண்ணனும். ஆங்கிலச் மேல தார் பூசனும். இதல்லம் பண்ணாம பி ஜே பி எப்படி வளரும் பண்டே ஜி


pmsamy
மார் 16, 2025 08:35

தமிழ்நாட்டுல பாஜகானா என்னன்னு தெரியாது அண்ணாமலைன்னு ஒருத்தன் உளறிட்டு இருக்கான் நீங்க தொண்டன் என்றால் நீ மட்டும் தான்


வெற்றிசெல்வன்
மார் 16, 2025 08:21

தில்லு முல்லு கயவர்கூட்டம் (திமுக) எப்பொழுதும் மக்களிடம் இன பிரிவினை, மொழி பிரிவினை செய்து குளிர்காய்கிறார்கள். இதை இன்னும் தமிழக மக்கள் உணரவில்லை. இந்த ஆட்சியாளர்களை சாட்டை கொண்டு அடித்து விரட்ட வேண்டும். அதற்கு மக்கள் அண்ணாமலை போன்ற தன்னலமற்ற தலைவருடன் அணி சேரவேண்டும்.


Varadarajan Nagarajan
மார் 16, 2025 08:00

தங்களின் மற்றும் தங்கள் கட்சியின் வளர்ச்சிக்காக எதைவேண்டுமானாலும் செய்யும் கட்சிகளைவிட நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு உலகநாடுகளுடன் போட்டியிட்டு உள்நாட்டு உற்பத்தி, வணிகம், பொருளாதாரம், திறன்மேம்பாடு, ஆராய்சசி, புதிய கண்டுபிடிப்புகள், விண்வெளி, ராணுவத்தளவாட உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, ரயில்வே என அனைத்து துறை வளர்ச்சிகளையும் முன்னெடுத்து செயல்படும் பிஜேபி சந்தேகமேயில்லாமல் நல்ல தலைவர்களை கொண்டு செயல்படுகின்றது. மதசார்பற்ற என்ற போர்வையை போர்த்திக்கொண்டு சாதி மத எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளை குறிவைத்து பிஜேபி அரசியல் செய்யவில்லை. ரமலான், கிறிஸ்த்துமஸ் போன்ற பண்டிகைகளின்போது அவர்களுடன் சேர்ந்து கொண்டாடியும் தீபாவளி மற்றும் பொங்கலுக்கு வாழ்த்துக்கூட சொல்லாமல் இருந்துகொண்டிருக்கும் அரசியல் கட்சிகலோடு ஒப்பிட்டால் பிஜேபி ஒன்றும் மதவாத கட்சியல்ல. வாக்கு வங்கிக்காக செயல்படாமல் நாட்டுமக்கள் எதிர்காலத்திற்காக பிஜேபி செயல்படுகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம், மதிப்பு, மரியாதை, உலக அரங்கில் மிக நன்றாக உயர்ந்துள்ளது. தேர்தலின்போது குவாட்டருக்கும், பிரியாணிக்கும், பரிசுபொருளுக்கும் மற்றும் பணத்திற்கும் தங்களது பொன்னான வாக்குகளை விற்றுவிட்டு பிறகு அல்லாடும் மக்களுக்கு தெரியாமலிருப்பது வேதனை. சுயசிந்தனையில்லாத வாக்காளர்களை சாதி மதம் போராட்டம் போன்ற மதிமயக்கத்திலேயே வைத்திருக்கும் அரசியல் கட்சிகளைவிட பிஜேபி சந்தேகமில்லாமல் நல்ல கட்சி. எனவே தெளிவுபெறவேண்டியது வாக்காளர்கள்தான்


nisar ahmad
மார் 16, 2025 02:34

ஆமிம் இங்கு பஞ்சம் பிழைக்க வந்துள்ள பீகாரி மற்றும் வடக்கன்களும் உழைக்க வேண்டும்.


Oviya Vijay
மார் 15, 2025 22:46

யார் உழைத்தாலும் தமிழகத்தில் பிஜேபிக்கு இடமில்லை... மக்களின் மனதில் பிஜேபி என்பது கோமாளிகளின் கூடாரம்... அவ்வளவே... 2026 என்ன 3026 ஆனாலும் தமிழகத்தில் மதவாத கட்சிக்கு மக்கள் ஆதரவு அளிக்க மாட்டார்கள்...


கிஜன்
மார் 15, 2025 22:36

அண்ணாமலை திமுக வளர உழைப்பதைத்தான் பார்க்கிறோமே .... ஒழுங்காக ...அனைத்து தலைவர்களையும் அரவணைத்து செல்ல சொல்லுங்கள் ... இல்லெங்கில் 2026 கனவுதான்


spr
மார் 15, 2025 22:26

அண்ணாமலை உழைப்பது பாஜக வெற்றி பெறவிடாமல் தவிர்க்க. மாநில மக்களின் கருத்தறியாது பேசினாலும் கூட மன்னிக்கலாம் ஆனால் தாமரை சூரியனை எதிர்பார்த்து நிற்பது நடைபெற்ற ஊழல்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பது இவற்றைக் கண்டிக்காமல் மறைமுகமாக பாடத்திட்டம் மூலம் இந்தித் திணிப்புக்கு ஆதரவாகப் பேசும் மத்திய பாஜக தலைமையை ஆதரிப்பது பாஜக எந்த நாளும் தமிழகத்தில் நிலைகொள்ள உதவாது


saravan
மார் 15, 2025 21:58

மக்களே, உண்மையான நாட்டுப் பற்று இருக்கும், சகோதர சகோதரிகளே, ஒன்றுபடுவீர்...இனியும் ஏமாறாதீர்...கேரளா, குஜராத், ஆந்திரா, ஒடிசா, போன்று உண்மையான மாநில வளர்ச்சி வேண்டுமா ? சிந்திப்பீர்... நேர்மையான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பீர்...தீபாவளிக்கு வாழ்த்து கூட சொல்லாத முதல்வர் தேவையா...தக்க பாடம் புகட்டுங்கள்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை