உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனி துறை ஏற்படுத்த கோரி ரேஷன் ஊழியர்கள் போராட்டம்

தனி துறை ஏற்படுத்த கோரி ரேஷன் ஊழியர்கள் போராட்டம்

சென்னை: பொது வினியோக திட்டத்திற்கு, தனி துறையை உருவாக்குவது உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர், சென்னை சிவானந்தா சாலையில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். இது குறித்து, சங்கத் தலைவர் ஜெயச்சந்திரராஜா கூறியதாவது: பல துறைகளின் கட்டுப்பாட்டில் செயல்படும், பொது வினியோக திட்டத்திற்கு, தனித் துறை உருவாக்க வேண்டும். இவ்வாறு அறிவித்தால், அரசின் செலவுகளை குறைக்க முடியும். ரேஷன் கடை விற்பனையாளர்கள், எடையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்க வேண்டும். அனைத்து கடைகளுக்கும், எடையாளரை நியமிக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில், ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில், உணவுப் பொருட்களை அனுப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை