மேலும் செய்திகள்
ஸ்ட்ராபெர்ரி சீசன் வரத்து அதிகரிப்பு
27-Dec-2024
சென்னை; சிவப்பு கொய்யாப் பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதால், கிலோ, 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.கல்லீரல் பாதிப்பை கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் உடையது சிவப்பு கொய்யாப்பழம். இதில், பல்வேறு சத்துக்கள் அடங்கி உள்ளதால், அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். தமிழகத்தில் வேலுார், திருப்பத்துார், மதுரை, சேலம், திண்டுக்கல், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், அதிக அளவில் இந்த வகை கொய்யா விளைகிறது. தற்போது, சிவப்பு கொய்யா அறுவடை களைகட்ட துவங்கி உள்ளது. இதன் காரணமாக, கிலோ, 100 ரூபாய் வரை விற்கப்பட்ட கொய்யாப் பழங்கள், தற்போது, 60 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. சென்னைக்கு தினமும், 30க்கும் மேற்பட்ட லாரிகளில், கொய்யா வரத்து உள்ளது. இதனால், பலரும் சிவப்பு கொய்யாப் பழங்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
27-Dec-2024