உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் வாங்க ரேகை பதிவு கட்டாயமல்ல

ரேஷன் வாங்க ரேகை பதிவு கட்டாயமல்ல

தமிழக ரேஷன் கடைகளில், கார்டில் உள்ள குடும்பத் தலைவர் அல்லது உறுப்பினர்களின் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு, உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக அனைத்து கடைகளுக்கும், 'பிரின்டர்' உடன் கூடிய கைரேகை பதிவு செய்யும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.'பெஞ்சல்' புயலால், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கன மழையால், பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டு உள்ளதால், ரேஷன் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பில் தாமதம் ஏற்படுகிறது. கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்க அதிக நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விரல் ரேகை சரிபார்ப்பில் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், விரல் ரேகை பதிவாகவில்லை என்றாலும், கார்டுதாரர்களை திருப்பி அனுப்பாமல், 'கார்டு ஸ்கேன்' செய்து, பொருட்களை விரைவாக வழங்குமாறு ரேஷன் ஊழியர்களை, உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ