உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாரிகளில் நிவாரண பொருட்கள்; முதல்வர் அனுப்பி வைத்தார்

லாரிகளில் நிவாரண பொருட்கள்; முதல்வர் அனுப்பி வைத்தார்

சென்னை : புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, 1.5 லட்சம் கிலோ அரிசி உள்ளிட்ட, நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனங்களை, சென்னை அறிவாலயத்திலிருந்து, முதல்வர் ஸ்டாலின் நேற்று கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.

தி.மு.க., அறிக்கை:

பெஞ்சல் புயல் காரணமாக, வரலாறு காணாத மழை வெள்ளத்தால், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார் உள்ளிட்ட மாவட்டங்கள், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு சார்பில், நிவாரணப்பணிகள் முடுக்கி விடப்பட்டு, இயல்பு நிலை திரும்பி வருகிறது. அரியலுார் மாவட்ட தி.மு.க., சார்பில், அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், 25,000 உணவுப் பொட்டலங்களை, விக்கிரவாண்டி தொகுதியில் விநியோகித்துள்ளார்.காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், அமைச்சர் அன்பரசன், ஒரு லட்சம் கிலோ அரிசியை அனுப்பி வைத்துள்ளார். சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ள, ஒன்றரை லட்சம் கிலோ அரிசி ஏற்றிய வாகனங்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவாலயத்தில் இருந்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை