உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசின் சமூகநீதி விடுதிகளில் அரங்கேறும் மதமாற்றம்: வீடியோ ஆதாரத்துடன் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அரசின் சமூகநீதி விடுதிகளில் அரங்கேறும் மதமாற்றம்: வீடியோ ஆதாரத்துடன் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அரசின் சமூகநீதி விடுதிகளில் மதமாற்றும் சம்பவம் அரங்கேறி உள்ளது'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இயங்கிவரும் ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில், விடுதி காப்பாளினியாகப் பணியாற்றி வரும் லட்சுமியிடம், விடுதி மாணவிகளை மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்துவதாகவும், மறுப்பவர்களை வன்கொடுமை செய்வதாகவும், குளியலறை மற்றும் கழிவறை பயன்பாட்டில் மாணவிகளுக்குப் பாரபட்சம் காட்டுவதாகவும், உணவுப்பொருட்களில் ஊழல் செய்வதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அவ்விடுதியில் தங்கிப் படிக்கும் ஒரு மாணவியின் பெற்றோரே இதுகுறித்த புகார் கடிதத்தினைத் தமிழக முதல்வர் உட்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைவருக்கும் அனுப்பியுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9b1jhwjx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இதுதான் சமூகநீதியா?

ஒவ்வொரு திட்டத்திற்கும் கவர்ச்சிகரமாகப் பெயர் சூட்டுவதில் அதீத அக்கறை காட்டும் திமுகஅரசு, அத்திட்டங்களை செயல்படுத்துவதில் கோட்டை விட்டுவிடுகிறது என்பதற்கான மற்றொரு சான்று இது. முறையான அடிப்படை வசதிகள் மற்றும் தகுதியான ஊழியர்களை மேம்படுத்தாமல், வெறும் கட்டடங்களின் பெயரை விதவிதமாக மாற்றி வைப்பதால் யாருக்கு என்ன பயன்? அரசின் சமூகநீதி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்குப் பெரும்பாலும் விடுதிக்குள்ளேயே சாதிய கொடுமைகளும், மத ரீதியான அடக்குமுறைகளும் நடக்கின்றனவே, இதுதான் திமுகவின் சமூகநீதியா?

உச்சமல்லவா?

அரசு விடுதியில் பணியாற்றும் ஒரு அரசு ஊழியருக்கு மதமாற்றம் செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வந்தது? மற்ற மதங்களைப் பாதுகாத்து ஹிந்து மதத்தைத் தொடர்ந்து தரக்குறைவாக விமர்சித்து வரும் திமுக ஆட்சியில், ஹிந்துக்களை மதமாற்றம் செய்தால் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காது என்ற இளக்காரமா? திமுகவே இதுபோன்ற மதமாற்றவாதிகளுக்குப் படியளந்து ஹிந்துமதத்தை அழிக்க முயற்சிக்கிறதா? அதிலும் மதமாற்றத்திற்கு மறுக்கும் பிள்ளைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது என்பது கோரத்தின் உச்சமல்லவா? https://x.com/NainarBJP/status/1969985143944479228

ஆபத்தானவை

சமத்துவத்தைப் பேணும் நமது நாட்டில் மாணவர்களிடையே இதுபோன்ற கட்டாய மதமாற்றங்கள் ஆபத்தானவை. அதுவும் அரசு விடுதிக்குள் நடக்கும் இந்த சமூகவிரோதச் செயலை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆளும் அரசும் அதை வேடிக்கை பார்க்கக்கூடாது. எனவே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய லட்சுமி என்பவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்வதோடு, தமிழகத்தில் இயங்கிவரும் பிற அரசு மாணவர் விடுதிகளையும் தனது நேரடிக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

ManiK
செப் 22, 2025 19:31

ஸ்டாலின் திமுக ஆட்சியில தான் அதிகபடியாக ஊர் முழுவதும் கனவர்ஷன் கூடாரங்கள் கடந்த 4ஆண்டுகளில் முலைத்துள்ளன.


Barakat Ali
செப் 22, 2025 19:26

மத மாற்றத் தடைச்சட்டம் இருக்கிறதே ????


AMMAN EARTH MOVERS
செப் 22, 2025 19:19

கட்டாய மதம் மாற்றம் தவறு மற்றபடி அவர் அவர் விருப்பப்படி கடவுளை வழி படுவது ஒன்றும் தவறு இல்லை


Nachiar
செப் 22, 2025 17:09

இந்துக்களுக்கு ஒரு தாயகம் தேவை. மத மாற்றம் சட்டப்படி தடை செய்யப்பட ஒரு மாநில அரசை தெரிந்தெடுக்கப் படும் வரை இந்த தொல்லை குற்றம் இருந்து கொண்டே இருக்கும். ஜெய் ஹிந்


Priyan Vadanad
செப் 22, 2025 16:09

சும்மா பூச்சாண்டி காட்டாதீர்கள் நாயனார். தப்பிருந்தால் இந்த அரசு தட்டி கேட்கும்.


Modisha
செப் 22, 2025 18:38

அப்போ தினமும் ஆயிரம் முறை தட்டிக்கேட்க வேண்டி இருக்கும் .


Priyan Vadanad
செப் 22, 2025 16:06

நயினார் எப்போது நாயனாராக மாறினார்? சும்மா நாயனம் ஊதாதீர்கள். ஈரை பேன் ஆக்காதீர்கள். பேனை பெருமாளாக்காதீர்கள்.


Nachiar
செப் 22, 2025 17:04

குப்பை மேட்டுக்குத்தான் பொருத்தமான கருத்து. சொல்லும் உதாரணத்தை பார்த்தாலே விளங்குது சொல்பவர் தலையில் என்ன ஊறுகிறது என்று.


Svs Yaadum oore
செப் 22, 2025 14:14

நாகப்பட்டினத்தில் ஆபாச நடிகன் பேச்சை மதுரையில் மேய்ப்பர் ஆலயத்தின் முன் பெரிய திரை வைத்து ஒளிபரப்பாம் ...மதம் மாற்றும் கும்பல் ....இது தான் சமூக நீதி மத சார்பற்ற கூட்டணி .....


Haja Kuthubdeen
செப் 22, 2025 14:08

பெயர் லட்சுமி...தூய ஹிந்து மத கடவுள் பெயர்!!!!இவர் எந்த மதத்திற்கு மாற தூண்டுகிறார்...


Modisha
செப் 22, 2025 18:40

உங்களுக்கு இருக்கும் ஆதங்கத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட ஹிந்துக்களிடம் இல்லை .


சந்திரசேகர்
செப் 22, 2025 14:07

மதம் மாற்றும் கும்பல் அதிகமாக உள்ள நாடுகளில் வன்முறைகள் மற்றும் போர்கள் அதிகமாக உள்ளது.இங்கே உள்ளவர்களை மதம் மாற்றிவிட்டு இங்கேயும் மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியாதபடி செய்வது தான் இவர்கள் லட்சியமாக இருக்கும் . எந்த கடவுள் மனிதனை மதம் மாற சொன்னார்?


Svs Yaadum oore
செப் 22, 2025 13:59

இது காலம் காலமாக நடந்து வருவதுதான் ....வெள்ளைக்காரன் கொடுக்கும் பிச்சை காசுக்கு இப்படி மதம் மாற்றும் செய்யும் கேவல கும்பல் ....இதை கேட்டால் ஹிந்து மதத்தில் ஜாதி என்று பேசுவான் ..என்னமோ இவன் மதம் ரொம்ப யோக்கியன் மாதிரி ......இதை விட படு மோசமான வன்முறை பிரிவு ஜாதிகள் கொண்டதுதான் இந்த மதம் மாற்றும் கும்பல் மதம் ...


Priyan Vadanad
செப் 22, 2025 16:01

யாதும் ஊரே யாவரும் கேளிர். சூதும் ஊரே என்று மாற்ற முயற்சிக்க வேண்டாம். சாதாரண மக்களை அசுர பணபலம் கொண்ட உங்களைபோன்ற நல்லவர்கள் அடிப்படை வசதிகளை பெற்று வாழச்செய்யுங்கள். அதை விட்டுவிட்டு இப்படி புலம்புவதில் என்ன லாபம்?