செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரையும் நீக்குங்கள்: தம்பிதுரை
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற எம்.பி., தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:தி.மு.க., ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போது பெண்களுக்கு பாதுகாப்பில்லை. ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளை பின்பற்றி பெண்களை போற்றும் ஒரே கட்சி, அ.தி.மு.க., தான். தமிழகத்தை ஆண்ட இரு பெண்களான ஜானகி, ஜெயலலிதா இருவரும், அ.தி.மு.க.,வினர் என்பதே அதற்கு சாட்சி.கடந்த, 1998ல் பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீட்டுக்காக குரல் கொடுத்தது, உள்ளாட்சி அமைப்புகளில், 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது என அனைத்தையும் செய்தது, அ.தி.மு.க., ஆனால், ஊழல் வழக்கிலும், பல்வேறு குற்ற வழக்குகளிலும் சம்பந்தப்பட்டு அமைச்சர் பதவியை இழந்து, ஜாமின் பெற்று வந்த செந்தில் பாலாஜி, பொன்முடி போன்றோருக்கு மீண்டும் அமைச்சர் பதவியை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.கட்சியில் துணை பொதுச்செயலராக இருந்த பொன்முடி, பெண்களை அவமதிக்கும் வகையில் பேசி உள்ளார். அவரை கட்சிப் பதவியிலிருந்து மட்டும் நீக்கியுள்ளனர். பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., அரசை துாக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர். இவ்வாறு கூறினார்.