உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டயர், டியூப் எரிக்காமல் போகி கொண்டாட வேண்டுகோள்

டயர், டியூப் எரிக்காமல் போகி கொண்டாட வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'பொதுமக்கள் டயர், டியூப் போன்றவற்றை எரிக் காமல், போகி பண்டி கையை கொண்டாட வேண் டும்' என, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.வாரியத்தின் தலைவர் ஜெயந்தி வெளியிட்ட அறிக்கை: நம் முன்னோர் பொங்கலுக்கு முன், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில், போகி பண்டிகையை கொண்டாடினர். இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட, பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தினர். இதனால், காற்று மாசுபடாமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் இருந்து வந்துள்ளது.இப்போது, பிளாஸ்டிக், செயற்கை இழைகளில் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர், டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்களை எரிப்பதால் காற்று மாசு அடைகிறது. போகி அன்று பொருட்களை எரிக்கும் போது ஏற்படும் புகையால், விமானங்கள் வருகை, புறப்பாடு தாமதமாகிறது. வாகன விபத்துக்கும் புகை காரணமாகிறது.பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் ஏற்படும், நச்சு வாயுவால், மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், 20 ஆண்டுகளாக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது. அதனால், கடந்த ஆண்டு பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது பெரும்பாலும் குறைந்தது. இந்த ஆண்டு போகியின் போது, சென்னையில் காற்று தரத்தை கண்காணிக்க 15 இடங்களில், 24 மணி நேரமும் ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காற்றின் தர அளவு, வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். இது தொடர்பாக, அனைத்து மாவட்டங்களிலும், விழிப்புணர்வு பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், போகியை கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 10, 2025 10:15

தமிழர்கள் முன்தோன்றிய மூத்த தொல் குடியினர்.. சமூகப் பொறுப்புள்ளவர்கள் ..... அப்படிச் செய்ய மாட்டார்கள் ....


Sundar R
ஜன 10, 2025 08:33

பல்லாவரம் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள தொழிற்சாலை மற்றும் தமிழகமெங்கும் பல தொழிற்சாலைகளில் ரப்பர் டயர், டியூப்களைத் தான் எரிபொருளாக பயன்படுத்துகிறார்கள். இது அன்றாடப் பிரச்சினையாக இருக்கிறது. மக்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால் அவதியுறும் அவலநிலை இருக்கிறது. போகியன்று டயர்களை எரிப்பது ஒருநாள் பிரச்சினை தான். அதனால், ரப்பர் டயர், டியூப்களை எரிபொருளாக எரிக்கும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களிடம் டயர், டியூப்களை எரிபொருளாக பயன்படுத்துவதை தடை செய்வது தமிழக நலன் சார்ந்த செயலாக இருக்கும்.


ராமகிருஷ்ணன்
ஜன 10, 2025 07:25

டயர், டியூப் எரிக்க வேண்டாம். திமுகவின் கட்சி அடையாளங்களை எரிக்கலாம். இந்து விரோத செயல்களை எதிர்த்த மாதிரியும் இருக்கும்


Kasimani Baskaran
ஜன 10, 2025 06:42

போகிப்பண்டிகை கொண்டாடப்பட வேண்டியதே - ஆனால் சாலை முழுவதும் டயர்களை அடுக்கி தீ வைக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவையற்ற பொருள்களை / பழக்கவழக்கங்களை நீக்குவதே போகியின் முக்கியத்துவம்.


Palanisamy T
ஜன 10, 2025 06:42

மக்கள் அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும். அப்போதுதான் நாடும் நல்லாயிருக்கும் நாமும் நல்லாயிருக்கலாம். பொங்கல் பண்டிகை சமய பண்டிகை. ஆதாவது சைவப் பண்டிகை. இயற்கையோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்ப வாழ்க்கை. இதுதான் சைவ வாழ்க்கை . குறிக்கோளும் அதுவே. இயற்கையை பேராசையால் மாசுப் படுத்தியதால்தான் இன்றைக்கு நமக்கு பல இன்னல்கள் துன்பங்கள். கடும் குளிர், கடும் வெட்பம் வறட்சி கடல்நீர் வெட்பம் அதிகரித்தல் கடல்வாழ் உயிரினங்கள் அழிதல், கடும் வெள்ளம் இவையெல்லாம் நாம் இயற்கையை மாசு படுத்தியதால் வந்த வினைகள். அரசின் கோரிக்கைக்கு மக்கள் செவிசாய்க்க வேண்டும். பொங்கல் வாழ்த்துக்கள்.


நிக்கோல்தாம்சன்
ஜன 10, 2025 05:36

தமிழர் நாகரீகம் வரவேற்கிறேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை