உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பழிவாங்கும் நடவடிக்கை

 பழிவாங்கும் நடவடிக்கை

த.வெ.க., அரசின் பழிவாங்கும் நடவடிக்கைதான், இந்த சோதனை. இரு தினங்களுக்கு முன், புதிதாக வந்துள்ள தமிழக முதல்வர், சட்டசபையில் கவர்னர் உரைக்கு பதில் கூறினார். அப்போது திட்டமிட்டு, ஆதாரமில்லாத குற்றச்சாட்டை கூறினார். நான் எழுந்து ஆதாரம் இருந்தால் கூறுங்கள் என்றேன். எதிர்க்கட்சி தலைவர் எழுந்து பேச, 'மைக் கொடுங்கள்' என கேட்டார். நானும் எழுந்து, மைக் கொடுக்கும்படி வலியுறுத்தினேன். சபாநாயகர் அனுமதிக்கவில்லை. நான் கேட்ட கேள்வி அடிப்படையில், 2022ல் கரூரில் ஏதோ ஒரு அலுவலகத்தில் நடந்த குற்றச்சாட்டை மையப்படுத்தி, என் வீட்டிற்கு 'ரெய்டு' வந்துள்ளனர். என் வீட்டிற்கு வந்தது மட்டுமின்றி, திருவண்ணாமலையில் உள்ள கல்லுாரிக்கு சென்று சோதனை நடத்தி உள்ளனர். கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் மனநிலை எப்படி இருக்கும். நீதிமன்றத்தில் நிரபராதி என நிரூபிப்பேன். சோதனையில் 40 லட்சம் ரூபாய் பறிமுதல் என்பது பொய்யான தகவல். வீட்டில் எந்த பணத்தையும் எடுக்கவில்லை. அலுவலகத்தில் இருந்த கணினியை எடுத்து சென்றுள்ளனர். - வேலு, முன்னாள் அமைச்சர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை