ஆர்.எம்.கே., இன்ஜி., கல்லுாரி பட்டமளிப்பு விழா
சென்னை: ஆர்.எம்.கே., இன்ஜினியரிங் கல்லுாரியின் 27வது பட்டமளிப்பு விழாவில், 768 மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கி, கவுரவிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் இயங்கும், ஆர்.எம்.கே., இன்ஜினியரிங் கல்லுாரி, 27வது பட்டமளிப்பு விழா, கல்வி நிறுவன வளாகத்தில், நேற்றுமுன்தினம் நடந்தது. ஆர்.எம்.கே., கல்வி குழுமத்தின் தலைவர், ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை தாங்கினார். விழாவில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர், ஜாய்தீப் தத்தா ராய், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின், வணிக குழும மனிதவளத்துறை தலைவர், ஸ்ரீராம் ஜோஷி ஆகியோர், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கினர். விழாவில், 768 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவில், பங்கேற்றவர்கள் பேசியதாவது: ஆர்.எஸ்.முனிரத்தினம்: மாணவர்கள், தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக முன்னேற்றம் அடைந்து, பெற்றோர்களுக்கும், கல்வி நிறுவனத்துக்கும், பெருமை சேர்க்க வேண்டும். ஜாய் தீப் தத்தா ராய்: மாணவர்கள், தங்களின் திறமைகளில், நம்பிக்கை வைத்து, தன்னம்பிக்கையுடன், எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். தன்னம்பிக்கையே, வெற்றிக்கான மிகப்பெரிய துணை. கல்வி மற்றும் திறன்களை பயன்படுத்தி, சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஸ்ரீராம் ஜோஷி: மாணவர்கள் தினமும், புதுமையான விஷயங்களை கற்று, அறிவை வளர்த்துக் கொள்வதே, நீண்டகால தொழில் முன்னேற்றத்திற்கான முக்கிய திறவுகோல். இவ்வாறு அவர்கள் பேசினர். ஆர்.எம்.கே., இன்ஜினியரிங் கல்லுாரியின், 27வது பட்டமளிப்பு விழாவில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் ஜாய்தீப் தத்தா ராய், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் வணிக குழும மனிதவளத்துறை தலைவர் ஸ்ரீராம் ஜோஷி ஆகியோர், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கினர். இடமிருந்து வலம்: கே.கே.சிவஞான பிரபு, கல்லுாரி முதல்வர் முகமது ஜுனைத், கல்வி நிறுவன ஆலோசகர் எம்.எஸ்.பழனிசாமி, துணைத் தலைவர் ஆர்.எம்.கிஷோர், கல்வி குழும நிறுவனத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், செயலர் யலமஞ்சி பிரதீப், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிச்சாண்டி மற்றும் கே.மணிவண்ணன் ஆகியோர். இடம்: கவரைப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம்.