உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரோலக்ஸ் காட்டு யானை பிடிபட்டது: கட்டுக்குள் கொண்டு வந்த கும்கி யானைகள்!

ரோலக்ஸ் காட்டு யானை பிடிபட்டது: கட்டுக்குள் கொண்டு வந்த கும்கி யானைகள்!

கோவை: கோவை, தொண்டாமுத்தூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் வலம் வந்த ரோலக்ஸ் காட்டு யானை கும்கிகள் உதவியுடன் பிடிபட்டது.கோவை, தொண்டாமுத்தூர் மற்றும் போளுவாம்பட்டி வனச்சரகத்திற் குட்பட்ட பகுதிகளில் உள்ள மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள விளைநிலங்கள், வீடு களை தொடர்ந்து, ரோலெக்ஸ் என்ற காட்டு யானை சேதப்படுத்தி வந்தது. ரோலெக்ஸ் யானையை பிடிக்கும் முயற்சியில், வனக்கால்நடை டாக்டர் விஜயராகவன் படுகாயமடைந்தார். அதன் பின், யானையை பிடிக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fjkv2ubv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரோலெக்ஸ் யானையை பிடிக்க, முதுமலையில் இருந்து, 2 டாக்டர்கள் வந்தனர். சின்னதம்பி என்ற கும்கி வரவழைக்கப்பட்டது. முதுமலையில் இருந்து, மேலும் 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, இரவு முதல் ரோலெக்ஸ் யானையை பிடிக்கும் பணி நடந்து வந்தது. தற்போது ரோலக்ஸ் காட்டு யானை கும்கிகள் உதவியுடன் பிடிபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை