உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளிர் உரிமை தொகைக்கு ரூ.13,807 கோடி; கனவு இல்லம் திட்டத்துக்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு!

மகளிர் உரிமை தொகைக்கு ரூ.13,807 கோடி; கனவு இல்லம் திட்டத்துக்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு!

சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு ரூ. 13,807 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.சட்டசபையில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விபரம் பின்வருமாறு:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=904di3g0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* உலக தமிழ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.1 கோடி வழங்கப்படும்.* ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம் அமைக்க ரூ.22 கோடி ஒதுக்கீடு.* ராமதாதபுரத்தில் நாவாய் அருட்காட்சியகம் அமைக்க ரூ.21 கோடி ஒதுக்கீடு* கருணாநிதி கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கீடு* கருணாநிதி நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு* அனைத்து நகர்ப்புறங்களிலும் சாலைகளை மேம்படுத்த ரூ.3,700 கோடி ஒதுக்கீடு* முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் 6,100 கி.மீ., நீள சாலைகள் மேம்படுத்தப்படும்; இதற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கீடு* எழும்பூரில் அருங்காட்சியக வளாகத்தில் சிந்துவெளி பண்பாடு அருங்காட்சியகம் அமைக்கப்படும்.* ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.* அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு.* சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் கட்டி தரப்படும். ரூ.600 கோடியில் 25,000 வீடுகள் கட்டப்படும்.* ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் அமைக்கப்படும்.* ரூ.675 கோடியில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்.* ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.* சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டத்திற்கு ரூ.2,423 கோடி ஒதுக்கீடு.* 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு ரூ.6,668 கோடி ஒதுக்கீடு.* மகளிர் விடியல் பயண திட்டத்திற்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு. * 10 ஆயிரம் பெண்கள் சுய உதவிக்குழு அமைக்கப்படும். இதற்கு ரூ.37 ஆயிரம் கோடி வழங்கிட இலக்கு* சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தத்வமசி
மார் 14, 2025 19:52

தலைக்கு ஆயிரம் ரூபாய். இலவச பஸ் பயணம். தமிழகத்தின் கடன் பத்து லட்சம் கோடியை நெருங்கப் போகிறது. இதெல்லாம் யார் தலையில் ? இந்த பெண்களுக்கு அது தெரியுமா ? இல்லை புரியுமா ?


Nallavan
மார் 14, 2025 14:24

கண்டிப்பாக வரி ஏற்றம் செய்யப்படவேண்டும்


கூமூட்டை
மார் 14, 2025 10:52

இது தான் கூமூட்டை திராவிட மாடல் போஸ்ட்


Bhakt
மார் 14, 2025 10:49

நைனா மத்திய பட்ஜெட்டை எப்போதும் சொல்லும் விமர்சனம். "உப்பு சப்பு இல்லாத பட்ஜெட்". அந்த வகையில் இந்த தா நா பட்ஜெட் ஊசிப்போன பட்ஜெட்.


xyzabc
மார் 14, 2025 10:31

முதலில் மகளிரை காப்பாற்ற பாருங்கள். வீண் பெருமை வேண்டாம். நிறைய பொய்களை கேட்டு காது செவிடு ஆச்சு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை