ரூ.1.73 கோடி பறிமுதல்
தமிழகத்தில், நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் வருவாய் துறை அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், நேற்று நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத பணம், 1.73 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 'கூகுள் பே' வழியே 1.60 கோடி ரூபாய், ஊழியர்கள் லஞ்ச பணமாக பெற்றது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சோதனையின்போது, ராமநாதபுரம் பஸ் நிலையத்தில், இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில், 20 ரூபாய்க்கான போலி கட்டண ரசீது வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 100 ரசீது அடங்கிய, 59 போலி ரசீது புத்தகம் மற்றும் கணக்கில் வராத பணம் 12,750 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என, லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.