உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாதம் ரூ.2,000 மகளிர் உரிமைத்தொகை: நிதி ஆதாரங்களை ஆராய அரசு உத்தரவு

மாதம் ரூ.2,000 மகளிர் உரிமைத்தொகை: நிதி ஆதாரங்களை ஆராய அரசு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மகளிர் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய, நிதித்துறைக்கு அரசு உத்தர விட்டுள்ளது.'மாநிலத்தில் உள்ள மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும்' என, 2021 சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., தரப்பில் வாக் குறுதி அளிக்கப்பட்டது.1.20 கோடி மகளிர் பயன்அதன்படி, 2023 செப்டம்பர் முதல், இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என பெயரிடப்பட்டு உள்ளது.இத்திட்டத்தின் கீழ், தற்போது 1.20 கோடி மகளிர் பயன் பெற்று வருகின்றனர். மகளிர் உரிமைத்தொகை பெற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், விண்ணப்பித்த பலரும் நிராகரிக்கப்பட்டனர். இதனால், மகளிர் மத்தியில் அதிருப்தி அதிகரித்தது.அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிருப்தியில் உள்ள மகளிரை திருப்திப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் வாயிலாக, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வாக்குறுதி அளித்து உள்ளார்.இந்நிலையில், அரசும் அதை செயல்படுத்தும் மனநிலைக்கு வந்துள்ளது. இதற்காக, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவது சாத்தியமா என்பது குறித்து ஆராய, நிதித் துறைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.செயல்படுத்த வாய்ப்புஇது குறித்து, சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆண்டுக்கு 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து, ஜி.எஸ்.டி., வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்களை தவிர்த்து, மற்ற அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது.இந்த பயனாளிகளுக்கு உரிமைத் தொகையை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க, எவ்வளவு தேவைப்படும்; அதற்கான நிதி ஆதாரங்களை எப்படி உருவாக்குவது என, நிதித்துறையிடம் அரசு பல கேள்விகளை கேட்டுள்ளது.சாதகமான அறிக்கை வந்தால், மகளிர் உரிமைத் தொகையை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கும் திட்டத்தை, அடுத்த ஆண்டு துவக்கத்தில் தமிழக அரசு செயல்படுத்த வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

sasikumaren
செப் 12, 2025 12:30

தேர்தல் நெருங்கி வரும் போது எல்லா லஞ்சமும் மக்களுக்கு கொடுப்பது வழக்கம் பிறகு மொத்தமாக பிடுங்கி விடுவான்கள் மக்கள் எவ்வளவு எளிதாக ஏமாந்து போகிறார்கள்


இந்தியன்
செப் 11, 2025 20:54

மகளிர் உரிமை தொகை ரூ.3000-ம் உயர்த்தி வழங்கலாம். நிதி ஆராய உத்திரவு எதற்கு. சொத்து வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம், பத்திர கட்டணம், வாகன உரிம கட்டணம், ஆகியவற்றை 100% உயர்தினாலேயே போதும். ஏற்கனவே உயர்த்தியதற்கு எதிர் கட்சிகள் போராட்டம் ஏதும் நடத்தவில்லை. தமிழ் நாட்டை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் மகளிர் உரிமை தொகை வழங்குகிறார்கள். இதை யாராலும் தடுக்க முடியாது.


Parthasarathy Badrinarayanan
செப் 11, 2025 18:25

போடுவது பிச்சை.


Yasararafath
செப் 11, 2025 17:42

திமுக அரசு ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது.அது என்ன மகளிருக்கு மட்டும் உரிமை தொகை.ஆண்களுக்கு உரிமை தொகை இல்லையா.?


ஆரூர் ரங்
செப் 11, 2025 12:57

இன்னொரு 5 பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்து கோடிக்கணக்கில் சம்பளம் கொடுங்க. கடன் வாங்க . ஐடியா குடுப்பார்கள்.


GoK
செப் 11, 2025 12:36

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்... இரண்டு மட்டுமல்ல இன்னமும் இருக்கிறது. மக்களை பிச்சைக்காரர்களாக்கிப் பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி..இன்றும் சாதி, மொழி, இனம் என்று பிரித்து காசை இறைத்து பிரியாணியை வீசி வாக்குகளை வாங்கும் அரசியல். குடும்பங்கள் சாசனம் செய்கின்றன தலைமுறைகளாக, வெட்கம் அவுங்களுக்குமில்லை, நமக்கு மில்லை. என்ன ஈனப்பழைப்பு


Amsi Ramesh
செப் 11, 2025 10:02

இருக்கவே இருக்கிறது டாஸ்மாக் சரக்கு விலையை உங்கள் வசதிக்கு உயத்தவும்


Kanns
செப் 11, 2025 09:29

DeRecognise All Political Parties/Men from Coning Any Elections for Gravest VoteBriberyCrimes. Recover EntireFreebies Costs from All Ruling Parties& LeadersCadres Besides Criminal Actions Without Bail Until Convictions for Crimes incl. Misusing Governance-Powers, MegaLoots etc


கல்யாணராமன்
செப் 11, 2025 08:02

இப்படி ஓட்டு வாங்குவதற்கு காஜானாவை காலியாக்கி கடன் வாங்கி கொடுக்க நினைப்பது குடி வருமானத்தை எதிர்பார்த்துதான் எல்லா மாநிலங்களும் செய்கின்றனர் அதற்கு வாத்தியார் ஸ்டாலின். எனவே இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமுல்படுத்தி ஆணை பிறப்பித்தால் எல்லோரும் அடக்கி வாசிப்பார்கள்.


Jayamkondan
செப் 11, 2025 06:56

விளங்கும்......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை