உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.5.5 கோடி ஹவாலா பணம் ஆம்னி பஸ்சில் பறிமுதல்

ரூ.5.5 கோடி ஹவாலா பணம் ஆம்னி பஸ்சில் பறிமுதல்

சென்னை:அச்சிறுபாக்கம் சுங்கச்சாவடி அருகே ஆம்னி பஸ்சில், 5.5 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஆம்னி பஸ்சில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், அந்த ஆம்னி பஸ்சை, போலீசார் பின்தொடர்ந்தனர். செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே பஸ்சை மறிக்க முயற்சித்த நிலையில், அந்த பஸ் சுங்கச்சாவடியை கடந்து சென்றது. பின், 'வாக்கி டாக்கி' வாயிலாக, உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அச்சிறுபாக்கம் சுங்கச்சாவடி அருகே பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தனர். பின், பஸ்சில் சோதனை செய்த போது, துணிப்பைகளில் கட்டுக்கட்டாக, 5 கோடி ரூபாய் பணம் கண்டறியப்பட்டது. பயணியர் கணேசன் மற்றும் ஆம்ரோஸ் வைத்திருந்த பைகளில், 50 லட்சம் ரூபாய் இருந்தது. கணக்கில் காட்டப் படாத, 5.5 கோடி ரூபாய் பணத்தை, போலீசார் பறிமுதல் செய்ததுடன், இருவரையும் விசாரிக்க சென்னை அழைத்து வந்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில், அது ஹவாலா பணம் என்றும், சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவருக்கு சொந்தமானது என்றும், காரைக்குடி கொண்டு செல்ல முயன்றதாகவும் தெரிய வந்து உள்ளது. பணம் பறிமுதல் குறித்து, அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் போலீசார் வெளியிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை