உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்ததே நான்தான்; சொல்கிறார் ஆதவ் அர்ஜூனா!

பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்ததே நான்தான்; சொல்கிறார் ஆதவ் அர்ஜூனா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூனா, 2021 சட்டசபை தேர்தலின்போது, பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்தது நான் தான் என்று வீடியோ வெளியிட்டுள்ளார். வாய்ஸ் ஆப் காமன் அமைப்பு விரைவில் ஒரு இயக்கமாக வீரநடை போட உள்ளது என்றும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் புத்தக வெளியீடு மற்றும் அந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேச்சு, தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் இடையே உரசலை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் வி.சி.க., தலைவர் திருமாவளவனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. வேறு வழியில்லாத சூழலில், கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனாவை 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jlcn3dqf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தான் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு, நீண்ட விளக்கம் ஒன்றை ஆதவ் அர்ஜூனா தமது வலைதள பதிவில் வெளியிட்டு இருந்தார். இன்றும் அவரது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில் நான்கரை நிமிடம் ஓடக்கூடிய வீடியோ தொகுப்பு ஒன்றையும் இணைத்துள்ளார். அந்த வீடியோவில் தமது வாழ்க்கை முறை, கல்வி, கடந்த கால நடவடிக்கைகள், தமது நோக்கம், தனது அமைப்பின் செயல்பாடுகள் என்னவாக இருக்கிறது, பணிகள் என்ன என்பதை குறிப்பிட்டு உள்ளார். வீடியோவில் தான் நடத்தி வரும் வாய்ஸ் ஆப் காமன்ஸ் அமைப்பின் நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இணைத்து இருக்கிறார். அதில் அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், முதல்வர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோருடன் ஒன்றாக இருக்கும் போட்டோக்களையும் பகிர்ந்து உள்ளார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வேலை பார்ப்பதற்காக, ஐ-பேக் அமைப்பை சேர்ந்த பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்ததே ஆதவ் அர்ஜூனா தான் என்றும், தேர்தல் களத்தில் முக்கிய பங்காற்றியது அவர் தான் என்றும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் வாய்ஸ் ஆப் காமன்ஸ் அமைப்பு, தேர்தல் அரசியலை வென்றெடுக்க ஒரு இயக்கமாக வீரநடை போடும் என்றும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

orange தமிழன்
டிச 11, 2024 09:25

இந்த லயோலா கூட்டத்தை அகற்ற வேண்டும்.... ஜெயா அம்மா இரும்பு கரம் கொண்டு கட்டுபாட்டில் வைத்திருந்தார்... பல வருடங்களுக்கு முன்னாள் இவர்கள் கல்லூரி சுற்றி இருந்த ஆக்கிரமிப்பை அகற்றினார் அப்பொழுது அக் கல்லூரியின் முதல்வர் தடுக்க பார்த்தார்....பருப்பு வேக வில்லை....மதம் மாற்றிகள்.....உஷார் மக்களே....


Jay
டிச 10, 2024 21:54

வரவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் எதிர்கட்சிக்கு ஓட்டு போடுபவர்களை குழப்பத்தான் தவெக, ஆதவ் நாடகம் எல்லாம். மன்னராட்சியிலிருந்து விடுபட வாய்ப்பு இல்லை.


Ramesh Sargam
டிச 10, 2024 21:12

திருமா இனி தெருவுக்கு போமா நிலைதான்... பாலூட்டி வளர்த்த கிளி, பாதாளத்தில் தள்ளுதடி...


Rajan
டிச 10, 2024 20:38

நல்ல புகைப்படம். ஏன்தான் கண்றாவி ஃபோட்டோ எடுத்து கொள்கிறார்களோ? மாரி தாஸ் சொல்றா மாதிரி ஆஅ ஃபேமஸ் ஆகிவிட்டார். இது தான் பிளானா? லயோலா கும்பல் ஆட்டமா?


T.sthivinayagam
டிச 10, 2024 20:19

திருமாவளவனுக்காக காத்துயிரும் நிலைதானா தமிழக பாஜக நிலைமை


தமிழ்வேள்
டிச 10, 2024 20:12

1950-1964 கால் கட்டத்தில் அண்ணாதுரை/கருணாநிதி - ராமசாமி நாயக்கர் லாவணிக்கச்சேரி தினசரிகளில், குறிப்பாக குடி அரசு தென்னாடு முரசொலி தந்தி பத்திரிக்கைகளில் சக்கைப்போடு போட்டது இன்றைய தலைமுறையினருக்கு அவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. தற்போது இந்த ஆதவ் குருமா சோசப்பு வகையறாக்களின் திமுக உடனான முட்டல் மோதல்கள் காரணமாக மீண்டும் அதேபோன்ற விவிகார லாவணி கச்சேரி நடக்கும் வாய்ப்பு உள்ளது..


தாமரை மலர்கிறது
டிச 10, 2024 19:52

ஆதவ் அர்ஜுன் திருமாவை பிஜேபி அணிக்கு அழைத்துவருவார். திமுக அணியை உடைப்பது தான் ஸ்டாலினுக்கு வைக்கப்படும் முதல் பொறி.


Pandianpillai Pandi
டிச 10, 2024 19:20

நீங்க வாங்க மக்களுக்கு நல்லது பண்ணுங்க அத விட்டுட்டு தி மு க மீது பழி சுமத்துவதெல்லாம் இனி எடுபடாது . தி மு க ஆட்சிக்கு வந்தா மக்களுக்கு முன்னேற்றப்பாதை தி மு க எதிர்கட்சியான இருந்தா மக்களுக்கு கேடயம் . இதைத்தான் கலைஞர் கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன் என்று சொன்னார் . இந்த சொல்லில் எவ்வளவு வழிகளை உள்ளடக்கியிருக்கிறது என்பதை அனுபவவிப்பவர்கள் உணர்வார்கள் . மக்களை கல்வியறிவு பெறச்செய்வதில் தி மு க வெற்றி கண்டுள்ளது. கல்வியின் மூலம் சிறந்த சமுதாயதத்தை உருவாக்க முடியும் என்ற பாதையில் மாணவர்களுக்கு திட்டங்களை வகுத்து இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்கிறது. தி மு க வின் சாதனை தெரியாமல் சும்மா நான் அவரைகூட்டி வந்தேன் இவரை கூட்டிவந்தேன் என்று சொல்லிதிரியாதீர்கள்.


VeeJay
டிச 10, 2024 18:52

மேயக்கறது எருமை இதுலா என்ன பெரும........


MADHAVAN
டிச 10, 2024 17:20

திருமாவளவன், விசிக ஆதவ் அர்ஜுன் என்று இதுக்கு முன்னாடி தின - மலர் நாளிதழில் இவ்வளவு செய்திகள் வந்ததே இல்லை, இப்போது மட்டும் ஏன் இந்த திடீர் பாசம், ஆதவ் அர்ஜுனை வச்சி காய் நகர்த்துவது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது,


sridhar
டிச 10, 2024 19:10

திமுக அடிமைகளுக்கு பயம்.


சமீபத்திய செய்தி