உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோட்டில் சேலம் ரவுடி வெட்டிக்கொலை; 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

ஈரோட்டில் சேலம் ரவுடி வெட்டிக்கொலை; 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஜான் 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.சேலம் ரவுடி ஜான் தனது மனைவியுடன் திருப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை வழக்கில் ஜாமினில் வந்து கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d5gniuuw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர், ஈரோடு மாவட்டம் பவானி அருகே மனைவி கண் முன்னே 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு சென்ற போது ரவுடி ஜானை காரில் துரத்திய கூட்டம், விபத்தை ஏற்படுத்தி வெட்டி சாய்த்தது. பட்டப்பகலில் கொலை நடந்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

3 பேர் கைது

கொலை செய்துவிட்டு தப்பி ஓடியவர்களில் 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இவர்களுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

naranam
மார் 19, 2025 23:45

ரவுடிகள் எப்படி செத்தாலும் கொண்டாட வேண்டியது தான். அவர்கள் ஒருவருக்கொருவர் கொலை செய்து கொள்வது நாட்டுக்கு நல்லதே. போலீஸ் இதைத் தடுத்து விடக் கூடாது.


Ramesh Sargam
மார் 19, 2025 20:04

தமிழகம் இந்தியாவின் கொலைநகரம்.


என்றும் இந்தியன்
மார் 19, 2025 17:54

ரவுடியாம் அவன் கொலை செய்யப்பட்டானாம்??? அவன் இருந்து ரௌடித்தனம் செய்ய அவசியம் வேண்டும் அப்படித்தானே???


m.arunachalam
மார் 19, 2025 17:49

ரவுடி ஜான் , பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன . ஜாமீனில் வந்து கையெழுத்து போடுகிறார் . எந்த துறையும் நம்மை காக்க போவதில்லை .


ponssasi
மார் 19, 2025 17:27

ரொம்ப கோவமா வருது, கருத்து போட முடியல


surya krishna
மார் 19, 2025 16:55

daily kolai kollai ithuthaan thiravidiya stock


अप्पावी
மார் 19, 2025 16:18

திராவிடனுங்க வெச்சதுதான் சட்டம். அதன் பிடியிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. விடியல் பேசுனது இப்பத்தான் புரியுது.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 19, 2025 16:16

போலீசுக்குத் தெரியுமா இப்படியெல்லாம் நடக்கும்ன்னு ???? இப்படிக் கேட்டுக் கேட்டு திமுக கொத்தடிமைகள் அசந்துபோனார்கள் ....


எவர்கிங்
மார் 19, 2025 15:53

சபாஷ் நடப்பது விடிக்கையில் ஆச்சி


ديفيد رافائيل
மார் 19, 2025 15:36

சாகட்டும் இந்த மாதிரியான ஆளுங்க நாப்டுக்கு தேவையில்லை. "கத்தி எடுத்தவன் கத்தியில் தான் சாவான்"


MUTHU
மார் 19, 2025 17:22

பல்வேறு கொலைகளின் பின்னணியில் பெரும்பாலும் ஆளும் கட்சி சார்ந்தவர்களே இருப்பார்கள்.


சமீபத்திய செய்தி