உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சக்சேனா, ஐயப்பனுக்கு 2 நாள் போலீஸ் காவல்

சக்சேனா, ஐயப்பனுக்கு 2 நாள் போலீஸ் காவல்

சென்னை:'சிந்தனை செய்' படத்திற்கு கிராபிக்ஸ் தயார் செய்தவரை மிரட்டிய வழக்கில், சக்சேனாவை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, எழும்பூர் கோர்ட் அனுமதியளித்துள்ளது.சென்னை, விருகம்பாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகரைச் சேர்ந்தவர் அருள் மூர்த்தி; நுங்கம்பாக்கத்தில் 'டிஜிட்டல் மேஜிக் விஷன்' என்ற பெயரில், திரைப்படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகள் செய்து கொடுத்து வந்தார். இந்நிலையில், ஆர்.எம்.ஏ., பிலிம் பேக்டரி நிறுவனத்தை நடத்தி வரும், தயாரிப்பாளர் அம்மா ராஜசேகர், 'சிந்தனை செய்' என்ற படத்தை, தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரித்து, 'சன் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு விற்பனை செய்தார்.இந்தப் படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் அனைத்தையும் செய்வதற்கு அருள்மூர்த்தியிடம், 22 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக, பல தவணைகளாக 11 லட்ச ரூபாய் தரப்பட்டது. கிராபிக்ஸ் பணிகள் முடிந்த நிலையில், மீதமுள்ள 11 லட்ச ரூபாயை தயாரிப்பாளர் அம்மா ராஜசேகரிடம், அருள் மூர்த்தி கேட்டுள்ளார்.தொடர்ந்து, கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி, நுங்கம்பாக்கத்தில் உள்ள போர் பிரேம் தியேட்டருக்கு பிலிமுடன் வந்தால், ஆறு லட்ச ரூபாய் தருவதாக அருள் மூர்த்தியிடம், அம்மா ராஜசேகர் கூறியுள்ளார்.இதை நம்பி அங்கு சென்ற அருள் மூர்த்தியிடம், ஆறு லட்ச ரூபாய்க்கான இரண்டு, 'செக்'குகள் கொடுக்கப்பட்டன. மீதமுள்ள பணத்தை அருள் மூர்த்தி கேட்ட போது, பிலிமை வாங்கிக் கொண்ட அம்மா ராஜசேகர், 'சன் பிக்சர்ஸ்' ஹன்ஸ்ராஜ் சக்சேனா, ஐயப்பன் உள்ளிட்டோர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.தற்போது ஆட்சி மாற்றம் எற்பட்ட நிலையில், நடந்த சம்பவம் குறித்து, நுங்கம்பாக்கம் போலீசில் அருள் மூர்த்தி புகார் அளித்தார். புகாரின்படி வழக்கு பதியப்பட்டு, அம்மா ராஜசேகர், சக்சேனா மற்றும் ஐயப்பனை போலீசார் கைது செய்தனர்.இதில், சக்சேனா, ஐயப்பனை, தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க, எழும்பூர் கோர்ட்டில் நுங்கம்பாக்கம் போலீசார் அனுமதி கேட்டனர். இதற்காக, சக்சேனா மற்றும் ஐயப்பன் இருவரும் எழும்பூர் கோர்ட்டிற்கு கொண்டு வரப்பட்டனர். இது தொடர்பான வழக்கு, எழும்பூர் 14 வது கோர்ட் மாஜிஸ்திரேட் கீதாராணி முன், விசாரணைக்கு வந்தது.மனு மீதான விசாரணை பிற்பகல் 2.30 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர், இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், இரண்டு நாட்கள் அதாவது புதன் கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மாஜிஸ்திரேட், கீதாராணி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை