எஸ்.பி.ஐ., புதிய பண்டு துவங்குகிறது
'எஸ் .பி.ஐ., குவாலிட்டி பண்டு' என்ற புதிய நீண்ட கால ஈக்விட்டி திட்டத்தை துவங்க எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு நிறுவனம், செபியிடம் வரைவு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது. உயர் தரம் மற்றும் வலுவான அடிப்படைகளைக் கொண்டவை என அடையாளம் காணப்படும் நிறுவனங்கள் மற்றும் ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் வாயிலாக, நீண்டகால அடிப்படையில் மூலதனத்தை பெருக்குவதே நோக்கம் என அந்நிறுவனம் கூறியுள்ளது. குறுகிய காலத்தில் சந்தை ஆதாயங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு அல்லாமல், நிலையான வளர்ச்சியை எதிர்பார்க்கும் நீண்டகால முதலீட்டாளர்களுக்காக, இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும் என்பதால், ரிஸ்க் அதிகமாக இருக்கும் என்றாலும், வலுவான அடிப்படை கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் என்பதால், சந்தை வீழ்ச்சியின்போதும் சிறப்பாக செயல்பட முடியும் என எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு கூறியுள்ளது. நிலையான வளர்ச்சியை எதிர்பார்க்கும் நீண்டகால முதலீட்டாளர்களுக்காக, இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது