உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எச்.ஐ.வி., பாதித்த குழந்தைகளுக்கு உதவித்தொகை திட்டம் துவக்கம்

எச்.ஐ.வி., பாதித்த குழந்தைகளுக்கு உதவித்தொகை திட்டம் துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம், தமிழக அரசால் துவக்கப்பட்டுள்ளது.உலக ரத்த தானம் செய்வோர் தினம், எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 1,000 ரூபாய் மாத உதவித்தொகை வழங்கும் திட்டம், 100 அரசு பள்ளிகளில் வாழ்வியல் திறன் பயிற்சி, 50 கல்லுாரிகளில் 'ரெட் ரிப்பன் கிளப்' திட்டம் துவக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. அமைச்சர் சுப்பிரமணியன் திட்டங்களை துவக்கி வைத்தார்.

'ரெட் ரிப்பன் கிளப்'

நிகழ்ச்சிக்குப் பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:'எச்.ஐ.வி., தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்' என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.அதன்படி, 7,618 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க 1.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது. பால்வினை நோய் குறித்து கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, 50 கல்லுாரிகளில் புதிதாக 'ரெட் ரிப்பன் கிளப்' உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.முதற்கட்டமாக, 11 துவக்கப்பட்டுள்ளது. வளரிளம் பருவத்தினருக்கு, எச்.ஐ.வி., குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.ரத்ததானம் செய்யும் வாழ்நாள் சாதனையாளர்களை கவுரவிக்க, விருதுகளுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. ஒரு சிலர் எங்களுக்கு விருது வழங்கவில்லை எனக் கூறியுள்ளனர்.துறை இயக்குநர் சீதாலட்சுமி, மாவட்ட அளவில், கணக்கெடுப்பு நடத்தி யார், யார் தொடர்ந்து எத்தனை முறை ரத்ததானம் செய்திருக்கின்றனர் என முழுமையாக ஆய்வு செய்வார்.

தட்டுப்பாடு இல்லை

விடுபட்டவர்களுக்கு அக்டோபர் மாதம் நடக்கும் விழாவில், விருதுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். அரசு மருத்துவமனையில் மஞ்சள் காமாலை மருந்து போதிய அளவில் இருப்பு இல்லை என்பது தவறான தகவல்.அரசு மருத்துவமனைகளில் எந்தவிதமான மருந்தும் தட்டுப்பாடு இல்லை. அனைத்து அவசியமான மருந்துகளும், போதுமான அளவிற்கு கையிருப்பில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
ஜூன் 18, 2025 14:56

பாவம் சார்.


M Ramachandran
ஜூன் 18, 2025 11:49

நல்ல திட்டம் தான்.


Thravisham
ஜூன் 18, 2025 11:19

சார் சொன்ன சரியாக இருக்கும்


அருண், சென்னை
ஜூன் 18, 2025 08:08

நீங்க என்னதான் கழுவி ஊத்தினாலும் எங்களுக்கு கவலை இல்லை... எங்களுக்கு பரம்பரைபரம்பராய் கொத்தடிமைகள் கூட்டம் இருக்கவே இருக்கு... மேலும், பாதி பேர் தேர்தலின் போது தங்கள் சொந்த ஊருக்கு போய்டுவாய்ங்க, கொஞ்சம் பேரு புதோசாலித்தனமா NOTAவுக்கு ஒட்டு போடுவாய்ங்க, மீதி பேரு மதம் சார்ந்து வோட்டு போடுவாய்ங்க, மீதம் பேரு வீட்டுலே இருந்துகிட்டு யாருவந்தாலும் ஆட்சி சரி ஆகாது-னு குறைமட்டுமே சொல்லி வோட்டு சாவடிக்கு போகமாட்டாய்ங்க... அப்புறம் என்ன, எதிர்க்கட்சியில் நிற்பவர்களுக்கு காசு கொஞ்சம் அதிகமாகவே கொடுத்தால் நாங்க தான் தேர்தலில் வெற்றிபெருவோம்... பெரியகாரியமில்லை


Kumar Kumzi
ஜூன் 18, 2025 07:05

சாருக்கே டவுட்டு வந்துருச்சி அந்த அண்ணாமலை பல்கலைக்கழக குழந்தைக்கும் கெடைக்குங்களா சார்


GMM
ஜூன் 18, 2025 07:05

நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தேவை மருந்து.ஆயிரம் ரூபாய் எப்படி மதிப்பீடு செய்தது திராவிடம். குழந்தை பணத்தை எப்படி பராமரிக்கும்? அப்பாவிடம் கொடுத்தால் டாஸ்மாக் செல்லும். ஆகவே, வங்கி கணக்கு கார்டியன் திட்ட மந்திரியாக இருக்க வேண்டும்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 18, 2025 06:57

100 சதம் திமுகவினர் சுருட்டி முழுங்குவற்கு போட்டுள்ள திட்டம். தேர்தல் செலவுக்கு பணம் வேண்டும் என்பதால் இது போன்ற டூபாகூர் திட்டங்கள் நிறைய வரும்


SUBBU,MADURAI
ஜூன் 18, 2025 05:57

மாசு சார் நீங்க ஆட்சிக்கு வந்து இந்த நாலு வருஷமா மக்களுக்கு பயன்படும் எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செயல் படுத்தலை ஆனா ஒங்க திருட்டு திராவிட மாடல் திமுக ஆட்சி முடிவதற்கு ஒன்பது மாதங்களே உள்ள நிலையில் இது போன்ற கண் துடைப்பு திட்டங்களை அறிவித்து தமிழக மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்று நினைத்தால் உங்கள் ஆசையில் மண்தான் விழப் போகிறது தமிழக மக்கள் இப்போது தெளிவாகி விட்டனர் அவர்களிடம் இதுபோன்ற ஏமாற்று வித்தை இனிமேல் பலிக்காது.


முக்கிய வீடியோ