வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சூப்பர் sir
சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் பணி யாற் றும் ஊழியர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, ராஜரத்தினம் விளையாட்டரங்கம் முன், உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இது குறித்து, அச்சங்கத் தின் செயலர் லெட்சுமணன் கூறியதாவது: பட்டப்படிப்பு முடித்த எங்களை, 20 ஆண்டுகளுக்கு முன், வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் எழுத்து தேர்வு நடத்தி, இனசுழற்சி அடிப்படையில் வேலைக்கு எடுத்தனர். கடந்த 20 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில், முழுநேர பணியாளர்களாக பணி செய்து வருகிறோம். எங்களுக்கு மாதம் 12,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப, குடும்பத்தை நடத்த, இந்த ஊதியம் போதாது என்பதால், எங்களுக்கு நிரந்தர பணி ஒதுக்கி, மற்ற சலுகைகளை வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
சூப்பர் sir