உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை, திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்

சென்னை, திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்

சென்னை: சென்னை மற்றும் திருவள்ளூரில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்து உள்ளன.வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்தது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால், 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், இன்று நிலைமை மாறியது. சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழையே பெய்தது. இந்த மாவட்டங்களில் நாளை ஒரிரு இடங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. பிறகு இதனை திரும்ப பெற்றுக் கொண்டது.இந்நிலையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து உள்ளனர்.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் செயல்படுவது குறித்து நாளை காலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை