உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3வது நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

3வது நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி, சென்னையில் மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கடந்த 26ம் தேதி மீண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து மாலை விடுவித்தனர். இரண்டாவது நாளாக நேற்று முன்தினம், சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்து மாலை விடுவித்தனர். மூன்றாம் நாளாக நேற்று, சென்னை பிராட்வேயில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு, நுழைவு வாயிலில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சில ஆசிரியர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள், சென்னையின் பல்வேறு பகுதிகளில் 10 திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். தங்களின் போராட்டம் இன்றும் தொடரும் என, இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

raja
டிச 29, 2025 11:59

மக்கா நீங்கள் தான் தேர்தலின் போது அனைத்து வாக்கு சாவடிகளில் அதிகாரிகளை இருந்து சுமார் 97 லட்சம் தற்போது அவைகள் SIR மூலம் நீக்க பட்டு விட்டது கள்ள ஓட்டு போட்டு விடியல் வேண்டும் என்று கொண்டுவந்த இந்த அரசை எதிர்த்து போராட கூடாது.. மாறாக ஸ்வீட் எடு கொண்டாடு ஸ்டாலிந்தான் வந்தாரு விடியல் தான் தந்தாரு என்று குதுகூலித்து பாடி ஆட வேண்டிய நேரம் இது...


shyamnats
டிச 29, 2025 09:16

முறையான நிர்வாகம் எங்குமே - டாஸ்மாக் தவிர - நடைபெறுவதாக தெரியவில்லை. முறையாக ஆசிரியர்கள் பதவிலமர்த்துதல், சம்பளம் கொடுத்தல் அவர்கள் தகுதி உயர்த்துதல் இல்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர், அனைவருமே அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ