அதிமுக கோஷ்டிகள் சபாநாயகரிடம் மனு; தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அதிமுகவில் தற்போது கோஷ்டி பூசல் நிலவி வரும் நிலையில், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது. இதற்கிடையே, சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் இபிஎஸ் மற்றும் எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் இருவரும் புகார் மனு அளித்தனர்.சட்டசபை தேர்தலில், 107 எம்.எல்.ஏ.,க்களை பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், வி.சி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளின், 13 இடங்களையும் சேர்த்து, 120 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆனால், அ.தி.மு.க., பிளவுபட்டு, முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பை சேர்ந்த, 25 எம்.எல்.ஏ.,க்கள் த.வெ.க., அரசுக்கு ஆதரவாக நேற்று ஓட்டளித்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s7uatnsl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்த, வேலுமணி, சி.வி.சண்முகம் உட்பட, 25 பேரை, அ.தி.மு.க., மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்து, இபிஎஸ் நீக்கினார். தன் உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிருப்தி கோஷ்டி எம்எல்ஏக்கள் மீது இபிஎஸ்யின் இந்த நடவடிக்கை மேலும் பிளவை அதிகரித்தது. இதற்கிடையே முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சிவி சண்முகம் தரப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி உள்ளது.அதிமுகவில் இரண்டு தரப்பினர் மாறி மாறி நிருபர்கள் சந்திப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதால், அக்கட்சி இரண்டாக உடைந்தது என்பது நிரூபணம் ஆனது.கோஷ்டி பூசல் காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது. பல்வேறு சோதனைகளை நடத்திய பிறகே அலுவலகத்திற்கு வருபவர்களை போலீசார் அனுமதிக்கின்றனர். கட்சிக்குள் உட்கட்சி பிரச்னை வெடித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு ஏற்படாது!
அதிமுக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் சி.வி சண்முகம் கூறியதாவது: நாங்கள் கட்சி அலுவலகத்திற்கு செல்லவில்லை; அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எங்களால் பாதிப்பு ஏற்படாது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு யாராலும் எந்த பிரச்னையும் ஏற்பட விட மாட்டோம். தலைமை அலுவலகம் எங்கள் கோவில் போன்றது'', என்றார்.
அதிமுக இருதரப்பும் மனு!
சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் இபிஎஸ் மற்றும் எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் இருவரும் தனி தனியே சென்று புகார் மனு அளித்துள்ளனர். தவெக அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்த எஸ்பி வேலுமணி தலைமையிலான 25 அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரைச் சந்தித்து இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். கட்சி எடுக்கும் முடிவு அடிப்படையில் கொறாடவை நியமிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பு வலியுறுத்தி உள்ளது. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு எம்எல்ஏக்களும் சபாநாயகரை சந்தித்து மனு அளித்தனர். பெரும்பான்மை எம்எல்ஏக்கள் முடிவு அடிப்படையில் கொறடாவை அங்கீகரிக்க வேண்டும் என எஸ்பிவேலுமணி தரப்பு தெரிவித்துள்ளது. ''சட்ட விதிகளுக்கு உட்பட்டே முடிவு எடுப்பேன்'' என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்ததாக இபிஎஸ் தரப்பு எம்எல்ஏ தளவாய் சுந்தரம் நிருபர்களிடம் கூறினார்.