உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளைப் பார்த்து படிக்க ஆர்வம் வந்தது; தாயும், மகளும் ஒரே நேரத்தில் எம்.பி.பி.எஸ்., சீட் பெற்று சாதனை!

மகளைப் பார்த்து படிக்க ஆர்வம் வந்தது; தாயும், மகளும் ஒரே நேரத்தில் எம்.பி.பி.எஸ்., சீட் பெற்று சாதனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; தென்காசியை சேர்ந்த தாயும், மகளும் ஒரே நேரத்தில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். மகளைப் பார்த்து படிக்க ஆர்வம் வந்ததாக தாய் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. மாற்றுத்திறனாளிக்கான நேர்முக கலந்தாய்வு சென்னையில் நேரில் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த, அமுதவல்லி என்ற 49 வயதான பெண், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கலந்து கொண்ட நிலையில் அவருக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dcug0iaw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தனது மகள் சம்யுக்தா கிருபாயிணி நீட் தேர்வுக்கு பயின்றபோது பாடங்களை தனது தாயிடம் பகிர்ந்து உள்ளார். அதனால் ஏற்பட்ட ஆர்வத்தால் தாயும் நீட் தேர்வு எழுதி, 147 மதிப்பெண்கள் பெற்றார். அதேபோல், 460 மதிப்பெண் பெற்ற மகளும், மருத்துவக் கல்லூரியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.

படிப்பதற்கு ஆர்வம்

இது குறித்து அமுதவல்லி கூறியதாவது: ஆர்வத்தில் தான் படித்தேன். ஏற்கனவே 15 ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி.பி.எஸ்., படிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. அந்த நேரத்தில் பிசியோதெரபி படிப்பு தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது தனது மகளால் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் நீட் தேர்வுக்கு நன்றாக படிக்கலாம் என நினைத்து படித்து விட்டேன். எனக்கு எனது மகள் முழு ஆதரவாக இருந்தாள். இவ்வாறு அவர் கூறினார்.தாய்க்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து சம்யுக்தா கிருபாயிணி கூறியதாவது: நான் படிக்கும் போது அம்மாவிடம் சொல்லிக் கொண்டே படிப்பேன். அம்மாவுக்கும் விருப்பம் இருந்தது. என்னுடன் சேர்ந்து படித்தார்கள். இவ்வாறு அவர் கூறினார். தாய், மகள் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் மருத்துவ படிப்பு படிக்கும் வாய்ப்பைப் பெற்று சாதித்துள்ள நிலையில், படிப்பிற்கு, 'வயது தடை இல்லை' என்பதை மாணவியின் தாய் அமுதவல்லி நிரூபித்துள்ளார். இவரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

M Ramachandran
ஜூலை 30, 2025 22:27

நல்ல ஆசை நிறைவேறியதற்கு மகிழ்ச்சியெ.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 30, 2025 21:01

உண்மையான காரணம் என்ன ?


rama adhavan
ஜூலை 30, 2025 21:33

நீட் தான் காரணம்.


Jack
ஆக 01, 2025 09:09

உழைப்பு தானே காரணம் ..அமெரிக்க யூனிவர்சிட்டிகளில் 60 வயதில் கம்பியூட்டர் சைன்ஸ் படிக்க வருகிறார்கள்


maan
ஜூலை 30, 2025 20:37

ஒரு ஊனமுற்ற கோட்டாவில் சேர வாய்ப்புள்ள இளைஞர்களின் சீட்டில் ஒன்று வீண். இந்தம்மா வயது 48. படித்து முடிக்கும் போது 55வயது. என்னாலும் நீட் பாஸ் செய்து ஒரு சீட் வாங்க முடியும் என்பதோடு இந்தம்மா நிறுத்தியிருக்கலாம்.


Subramanian
ஜூலை 30, 2025 20:24

வாழ்த்துக்கள்


Padmasridharan
ஜூலை 30, 2025 17:50

படிப்பிற்கு வயது கண்டிப்பாக தடையில்லை சாமி, ஏனென்றால் படிக்க பணம் கட்டுகிறோமில்லையா. . ஆனால் அதற்கேற்ற வேலை கொடுப்பதற்குதான் வயதை குறையாக காண்பித்து கொடுக்கமாட்டேன் என்கிறார்கள்.


Saran
ஜூலை 30, 2025 17:35

எம்பிபிஎஸ் இல் சம்பாதிக்கும் திறன் பல வரம்புகளுடன் வருகிறது, குறிப்பாக ஆரம்ப கட்டங்களில். முதலாவதாக, முழுநேர வருவாயைத் தொடங்குவதில் குறிப்பிடத்தக்க தாமதம் உள்ளது, ஏனெனில் எம்பிபிஎஸ் 5.5 ஆண்டுகள் ஆகும், மேலும் நிபுணத்துவம் இன்னும் 3-6 ஆண்டுகளைச் சேர்க்கலாம். இதன் விளைவாக, பல மருத்துவர்கள் மற்ற துறைகளில் தங்கள் சகாக்களை விட மிகவும் தாமதமாக சம்பாதிக்கத் தொடங்குகிறார்கள். இரண்டாவதாக, இந்தியாவில் புதிய எம்பிபிஎஸ் பட்டதாரிகளுக்கான ஆரம்ப சம்பளம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது, வழக்கமாக மாதத்திற்கு ₹25,000 முதல் ₹60,000 வரை, குறிப்பாக முதுகலை பட்டம் இல்லாமல். மூன்றாவதாக, தனியார் கல்லூரிகளில் கல்விக்கான செலவு மிகவும் அதிகமாக உள்ளது, இது ₹50 லட்சம் முதல் ₹1 கோடி வரை, இது பெரும் நிதிச் சுமையை உருவாக்குகிறது. நான்காவதாக, மருத்துவமனைகள் பெரும்பாலும் நிபுணர்களை விரும்புவதால், முதுகலை அல்லது சூப்பர்-ஸ்பெஷலைசேஷன் இல்லாமல், தொழில் வளர்ச்சி மற்றும் சம்பள வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. கடைசியாக, முதலீட்டின் மீதான வருவாய் மெதுவாக உள்ளது, குறிப்பாக ஐடி அல்லது பொறியியல் நிபுணர்களுடன் ஒப்பிடும்போது, அவர்கள் முன்னதாகவே சம்பாதிக்கத் தொடங்கி, மிக விரைவில் நிதி ஸ்திரத்தன்மையை அடைகிறார்கள்.


Thravisham
ஜூலை 30, 2025 19:17

மிகவும் உண்மையானா பதிவு


Yaro Oruvan
ஜூலை 30, 2025 16:59

வாழ்த்துக்கள் சகோதரி


Jack
ஜூலை 30, 2025 16:58

நீட் ஒழிக்கறவங்க என்ன சொல்லுவாங்க


Thravisham
ஜூலை 30, 2025 19:18

கண்டாலே ஓதையுங்கள்


T MANICKAM
ஜூலை 30, 2025 16:56

படிப்பிற்கு வயது தேவையில்லை வாழ்த்துகள்


pv, முத்தூர்
ஜூலை 30, 2025 16:55

அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்து, எங்கள் எதிர்காலத்திற்குத் தயாராகத் தொடங்கினோம்.


Thravisham
ஜூலை 30, 2025 21:48

அரசியல்வாதிகளில் மிக மிக மோசமான ரகம் திருட்டு த்ரவிஷன்கள். ஆனால் அண்ணாமலை போன்றோர் சார்ந்திருக்கும் பாஜக நிர்வாக திறமை, நாட்டு பற்று மிகுந்தது


புதிய வீடியோ