உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் ரஜினியுடன் சீமான் சந்திப்பு!

நடிகர் ரஜினியுடன் சீமான் சந்திப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நடிகர் ரஜினியை அவரது போயஸ் கார்டன் வீட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கும் வரை அவரை , நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரித்து பேசி வந்தார். ஆனால் விஜய் கட்சியின் கொள்கையை அறிவித்த பிறகு கடுமையாக விமர்சித்தார். இதுபோதாது என்று நாம் தமிழர் கட்சிக்குள்ளும் பிரச்னைகள் எழுந்துள்ளன. அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் சிலர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட கட்சிக்குள் நெருக்கடி அதிகரித்து வந்தாலும் சீமான் தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.இச்சூழ்நிலையில், நடிகர் ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் சீமான் இன்று(நவ.,21) இரவு சந்தித்து பேசினார். இச்சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின் போது என்ன ஆலோசிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், அரசியல் குறித்து பேசியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்பு, ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்த போது, அவரை சீமான் விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

பச்சை தமிழன்
நவ 22, 2024 17:57

ஒன்று பண பைத்தியம்...ஒன்று பதவி பைத்தியம்...


வாசகர்
நவ 22, 2024 17:46

இந்த ஆளு வாய்ஸ் எதாவது கொடுத்தாலும் கொடுப்பார். 2021ல் கடைசி வரை நம்பிக்கை கொடுத்து கால வாரினார்‌‌. இப்ப 2026க்கு ரெடி ஆகிறார். இவர் சொல்றதை யாரும் பொருட்படுத்த கூடாது.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 22, 2024 13:18

ரஜனிகாந்த் அவர்கள் திமுகவின் தூதுவராக சீமானை அழைத்து பேசியிருப்பார். சீமான் உங்களை திமுக கட்சி ஆரம்பிக்க வைத்த நோக்கம் என்றோ நிறைவேறிவிட்டது. ஆனால் நீங்கள் கமல்ஹாசன் போல திமுகவில் இந்நேரம் ஐக்கியம் ஆகி இருக்க வேண்டும் ஆனால் ஆகவில்லை. இன்னும் திமுகவை எதிர்ப்பது போலவே இருந்தால் எப்படி? தற்போது நாம் விஜயை களம் இறங்கி உள்ளோம். விஜய் நாம் கூறியபடி நடக்கிறார். ஆனால் கள நிலவரம் எதிர்பாத்ததை விட வேறு மாதிரியாக போகிறது. இளம் வயது புதிய வாக்காளர்கள் ஓட்டுகள் அதிமுகவிற்கு போகாமலும் அதிமுக வோட்டுகள சிதறி வெளியே போகும் என்று திமுக கணித்தது. ஆனால் இதற்கு நேர் மாறாக திமுக வோட்டுகளே சிதறி போய் விடும் போல தெரிகிறது. பாஜகவிற்கு சிறிது வோட்டுகள் போய் விடும் போல தெரிகிறது. ஆகவே சீமான் நீங்க கொஞ்சம் அடக்கி வாசிக்கனும். கமல்ஹாசன் மாதரி 2025 டிசம்பர் மாசம் திமுக கூட்டணிக்கு வரணும். விஜய் மற்றதை பார்த்துக்குவார். உங்களுக்கு 3 மந்திரி பதவி தர்றோம். ஆகவே இப்ப இருந்து நீங்க அதிமுக எதிர்ப்பு பாஜக எதிர்ப்பு செய்யனும் கொஞ்ச கொஞ்சமா திமுக எதிர்ப்பு கம்மி பண்ணி 2025 டிசம்பர்லே திமுக கூட்டணிக்கு வந்தோறோனும். அப்ப தான் நம்ம சினிமா ஜாதியிலே இருக்கவரங்க நல்ல கோடி கோடியா சம்பாதிக்க முடியும். இப்படி ரஜினிகாந்த் சீமானிடம் கூறியிருப்பார். இதற்கு உத்திரவாதம் சீமான் கண்களில் காட்டியிருப்பார். சீமானும் சரிங்க ரஜினி இதெல்லாம் ஒரு மேட்டரா கவலைபடாதீங்க தமிழனுக முட்டாளாகவே இருப்பாங்க. பார்த்துக்கலாம். அப்ப வரேன்.


SUBBU,
நவ 22, 2024 09:38

ரஜினிகாந்த் தமிழக முதல்வராக வந்து எங்களை ஆள வேண்டும் என்று நினைக்கக் கூடாது. ரஜினிகாந்தைப் பற்றி அவர் 'மூளையில்லாத மனிதர்' என்று முன்னாள் நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜூ சொன்னது சரிதான். ரஜினி கர்நாடகாவைச் சேர்ந்த கன்னடர். ஆனால் தமிழக மண்ணில் வாழ்கின்றவர் அதனாலேயே அவர் இந்த மண்ணை ஆள வேண்டும் என்று நினைக்க கூடாது தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்று ரஜினிகாந்த்தை மிகவும் கேவலமாக பேசியவர்தான் இந்த சைமன் என்கிற சீமான் அப்படிப் பட்ட சீமானுடன் இந்த ரஜினி இப்போது கை கோர்த்துக் கொஞ்சி குலாவுகிறார் அரசியலை பொறுத்த வரை யாருக்கும் வெட்கமில்லை என்பதுதான் உண்மை.


bharathi
நவ 22, 2024 09:26

Anniyar amavadai senjangala


சம்பா
நவ 22, 2024 05:50

சிக்க மாட்டார்


Mani . V
நவ 22, 2024 05:50

ஒரு அம்மன் சல்லிக்கும் பிரயோசனம் இல்லை. விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் சீமானுக்கும் பயம் வந்து விட்டது.


J.V. Iyer
நவ 22, 2024 04:25

மக்களை ஏமாற்றுவதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. ஒருவருக்கு பணத்தின்மீது மோகம். மற்றவருக்கு பயித்தியம்.


மோகனசுந்தரம் லண்டன்
நவ 22, 2024 02:02

இதில் என்ன பெரிய விசேஷம்


தாமரை மலர்கிறது
நவ 22, 2024 00:04

களத்தில் எடப்பாடி எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்பதற்காக இந்த சைமனுக்கு வெளிச்சம் போடத்தேவை இல்லை.


முக்கிய வீடியோ