உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விநாயகர் சதுர்த்தி நாளில் கிறிஸ்துவர்களுடன் சீமான் உரையாடல்

விநாயகர் சதுர்த்தி நாளில் கிறிஸ்துவர்களுடன் சீமான் உரையாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விநாயகர் சதுர்த்தி நாளில், நா.த.க., சார்பில் கிறிஸ்துவர்களுடன் உரையாடும் நிகழ்வு நடக்கிறது. நாம் தமிழர் கட்சியின் உலக தமிழ் கிறிஸ்துவர் இயக்கம் சார்பில், 'உரையாடுவோம் வாருங்கள்' என்ற கிறிஸ்துவர்களுடன் உரையாடல் நிகழ்ச்சி, நாளை நடக்க உள்ளது. திருச்சி ரயில் நிலையம் அருகே, சுமங்கலி திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்வில், கிறிஸ்துவர்களுக்கான அரசியல் கேள்விகளுக்கு, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளிக்க உள்ளார். ஏற்கனவே, கள் இறக்க அனுமதிக்க கோரி, பனை மரம் ஏறி போராட்டம் நடத்திய சீமான், அடுத்ததாக, 'கால்நடைகளுக்காக பேசுவேன்' என்றார். இதற்காக ஆடு, மாடுகளுக்கான மாநாட்டை நடத்தினார். பின், 'மரங்களுக்காக பேசுவேன்' என்று சொல்லி மரங்கள் மாநாடு நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, தற்போது கிறிஸ்துவர்களுக்கான உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இப்படி வித்தியாசமாக எதையாவது செய்து, மக்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் சீமான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ms Mahadevan Mahadevan
ஆக 26, 2025 18:59

விஜய் in வருகையின் விளைவு


Justine Samuel
ஆக 26, 2025 18:33

யானைத்தந்தங்களையும் 1 இராஜாக்கள் 10 22: ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத்தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.


அப்பாவி
ஆக 26, 2025 12:32

பைபிளில் யானை என்ற வார்த்தையே இல்லை. எனவே பரமபிதா யானையை படைக்கவில்லை. இல்லே அவருக்கே யானை பத்தி தெரியாது.அதே மாதிரி இந்துமத வேதங்களில் ஒட்டகம் கிடையாது. ஆப்பிள் பழமும் கிடையாது.கடவுள் எல்லாம் லிமிட்டட் ஏரியாலதான் இருந்தாங்க.


Sun
ஆக 26, 2025 09:28

இனிமே எங்க பாட்டன் முருகன். எங்க அப்பத்தா மாரியம்மான்னு எங்ககிட்ட வந்துராதே. நீ சைமன் என்கிற பெந்தகொஸ்தேதான் திரும்பவும் நிரூபிச்சுட்டே.


Subash rocky Subash rocky
ஆக 27, 2025 08:07

சரியாக சொன்னீர்கள்.


surya krishna
ஆக 26, 2025 09:19

அவனே ஒரு கிறிஸ்தவன் தான் அதை மறைத்து இந்து என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். திரைப்படத்துறையில் இயக்குனராக இவனால் ஜெயிக்க முடியவில்லை ஆனால் அரசியலில் நடிகனாக ஜெயித்து விட்டான். மக்கள் ஏமாறுகின்றனர் இவனின் மேடைப்பேச்சு நம்பி.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 26, 2025 07:23

சிந்தாமல் சிதறாமல் கிறிஸ்தவ வாக்குகள் திமுகவுக்குத்தான் கிடைக்கும் ..... அது அதிமுகவுக்கு கூட கிடைக்காது .....


Vasan
ஆக 26, 2025 07:07

SeeMan, and the masters of the Universe SeeMan


முக்கிய வீடியோ