உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கண்ணை விற்று சித்திரம் வாங்குவதா?: ரூபாய் குறியீடை மாற்றிவிட்டு மற்ற மொழிகளுக்கு அருங்காட்சியகமா?

கண்ணை விற்று சித்திரம் வாங்குவதா?: ரூபாய் குறியீடை மாற்றிவிட்டு மற்ற மொழிகளுக்கு அருங்காட்சியகமா?

சமஸ்கிருதத்தின் மூலமான தேவநாகரி எழுத்துருவில் இருப்பதாகக் கூறி, ரூபாய் குறியீடான ₹-யை ‛ரூ'' என தமிழில் மாற்றியது தமிழக அரசு. இப்படி செய்துவிட்டு மற்ற மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றிய அருங்காட்சியகம் அமைப்பதாக தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்தது பல வித விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பட்ஜெட்டில், உலகின் பழமையான பாரம்பரிய மொழிகளில் ஒன்றான தமிழின் தொன்மை மற்றும் தொடர்ச்சி குறித்து இளைய தலைமுறையினருக்குக் கற்பிக்க மதுரை உலகத் தமிழ் சங்க வளாகத்தில் 'அகரம் - மொழிகள் அருங்காட்சியகம்' நிறுவும் திட்டத்தை அறிவித்துள்ளது.இந்த அருங்காட்சியகம் பிற இந்திய மொழிகளுடனான தமிழின் மொழியியல் உறவுகளை எடுத்துக்காட்டும். இது தென்னிந்திய பழங்குடி சமூகங்களால் பேசப்படும் மொழிகளை ஆவணப்படுத்தும். இதில் வினோதம் என்னவென்றால், அருங்காட்சியக அறிவிப்புக்கு முன்னதாகவே, மொழிக் கொள்கை மற்றும் கல்வி நிதி தொடர்பாக தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உரசல் உருவாகி விட்டது. சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,150 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார். இருமொழிக் கொள்கையில் மாநிலம் உறுதியாக இருப்பதாக அவரும் முதல்வரும் திரும்ப திரும்ப கூறி வருகின்றனர். அதாவது, தமிழ், ஆங்கிலம் தவிர வேறு மொழிகள் எங்களுக்கு வேண்டாம் என்று தெளிவாக கூறிவிட்டனர்.அதிகாரப்பூர்வ ₹ சின்னத்தை 'ரூ' (தமிழில் ரூபாய்) என்ற தமிழ் எழுத்தால் மாற்றிய ஒரு நாளுக்குப் பிறகு அருங்காட்சியக அறிவிப்பு வருகிறது, அதாகப்பட்டது, முதல் நாள் ஒரு அறிவிப்பு, மறுநாள் அதற்கு நேர் விரோதமாக இன்னொரு அறிவிப்பு.சகிப்புத் தன்மை எங்கே:ஒரு மொழி வளர வேண்டும் என்றால், அது மற்ற மொழி, கலாசாரம், பண்பாட்டில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்து தான் ஆங்கிலம் உலக மொழி ஆனது. ஆனால், தமிழை காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் திராவிட கட்சிகள், தமிழை பின்னோக்கி இழுக்கும் வேலையை செவ்வனே செய்கின்றன.ஒரு தமிழர் வடிவமைத்து இந்தியாவே ஏற்றுக்கொண்ட எழுத்துருவை திடீரென ஏற்க மறுத்துவிட்டு, மற்ற மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை மட்டும் எப்படி இவர்கள் ஆராய்வார்கள்?.மற்ற மொழிகளுடன் தமிழுக்கும் உள்ள தொடர்பை ஆராய வேண்டும் என்றால் மற்ற மொழிகளையும் இவர்கள் கற்றுத் தானே ஆக வேண்டும். வேறு மொழியை கற்காமல் எப்படி அதனுடன் தமிழுக்கு உள்ள தொடர்பை ஆய்வு செய்ய முடியும்?. இது, கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போல் இல்லையா. பேசுவது ஒன்று, செய்வது வேறா. ஏனிந்த இரட்டை வேடம். தமிழை உண்மையில் வளர்க்க வேண்டும் என்றால், அதை செறிவூட்ட வேண்டும்; தமிழில் இல்லாத உச்சரிப்புகள், வார்த்தைகளை கொண்டு வந்து நவீனப்படுத்த வேண்டும். மற்ற மொழிக்காரர்களும் கற்கும் வகையில் எளிமைப்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு அரசியல் செய்து கொண்டிருந்தால், தமிழ் எப்படி வளரும்?.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 73 )

ஜெய்ஹிந்த்புரம்
மார் 17, 2025 23:21

மோடி தமிழை பற்றி மேடையில் மட்டுமே அலங்கார வார்த்தைகள் பேசிவிட்டு அதன் வளர்ச்சிக்கு சில்லறையை தூவி விட்டு, ஆனால் செத்துப்போன சமஸ்கிருதத்துக்கு பல்லாயிரம் கோடி வாய்க்கரிசி போடுவதை எப்படி வர்ணிப்பீர்கள் ? ஒரு மாநிலத்தின் பட்ஜெட்டில் அந்த மாநிலத்தின் மொழியில் ஒரு ஒற்றை எழுத்தை போட்டதற்கு இந்த ஆர்ப்பாட்டமா? பழைய முறையில் பணத்திற்கு ரூ. என்று எழுதுவதும், வருடத்திற்கு வரு. என்று எழுதுவதும், மேற்படி என்பதற்கும் ஈரெழுத்தை இணைத்து ஓரெழுத்தாகவும் எழுதும் வழக்கம் இருந்துள்ளது. பழமையை பைடித்து தொங்கும் கூட்டம் இந்த ஓரெழுத்தை கண்டு ஓலம் இடுவது நாராசமாக இருந்தாலும் உள்ளுக்குள் வேடிக்கையாக உள்ளது ..


Abdul
மார் 16, 2025 22:53

பிஜேபி நல்ல ஜால்ரா போடுற


V GOPALAN
மார் 16, 2025 20:04

No other states in India doing dirty politics with their languages except tamilnadu. All channels should not encourage this. Other wise you should not give any news other tamilnadu related. Language is just only a link to understand the subject. Just because we do jot know other state language we should not boost our Tamil. Surprise even Ayas are for politics purpose boosting Tamil unnecessarily. In tamilnadu we have English Church Malayalam Church and Hindi Church also in borders. Urudu Kannada Malayalanlm Telugu are speaking in all houses though they are called Tamilians. So we request all channeks pandits Ayas do not do dirty language politics like DMK. Sun TV artists mostly are not tamilians. We all four state should unite now. School should have choice to read and write their mother tongue like telugu Kannada Urudu and malaiyalam and Hindi in our Tamilnadu schools like French and German


rajeswaran durairaju
மார் 16, 2025 16:31

யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோம் என்று மகாகவி பாரதியார் அவர்கள் சொல்லியிருக்கிறார் என்பதிலிருந்து அவர் பல மொழிகளைக் கற்றிருக்கிறார் என்பது மட்டுமின்றி தமிழ் தான் சிறப்பானது என்று கணித்திருக்கிறார். ஒரு பொருள் சிறப்பானது என்று சொல்ல மற்றொரு பொருள் இருக்கவேண்டும். அவர் கண்களை மூடி சொல்லவில்லை. வாழ்க பாரதி


Sampath Kumar
மார் 16, 2025 16:29

ஒரு பிரதேசத்தை அழிக்க வேண்டும் என்றால் அங்கு பேசப்படும் மொழியை அழிக்க வேண்டும் சொன்னது பிஜேபி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவர் பேரை கூட நான் குறிப்பிட விரும்பவில்லை அப்பர் பட்ட நாசகார நயவஞ்ச பிஜேபி காரன் சொல் க்கின்றன் தமிழத்தில் நிறுவப்பட உள்ள மொழி அரங்கத்தை பற்றி இங்கே தமிழ் மொழியை வளர்க்கவே அமைக்கப்படுகிறது என்று கூட புரியாமல் பிதற்றுகின்றார்கள் மொழி வளர் வேண்டும் என்றால் பிற மொழிகளோடு உறவாட வேண்டும். தமிழை எம் மொழியாக வேண்டி பாடு பட்டவர் கருஅனீதி தான் வேர் ஏவனும் இல்லை அதுக்கு எத்தனை போராட்டம் நடத்தவேண்டி வந்தது என்று தமிழ் நாடு அறியும் உங்க பத்து வேலை இல்லம் இங்கே செல்லாது மொழி காட்சி அமைக்க ஆர்னே பிஜேபி அரசும் தான் செயல் பாடும் தான் உன் ஒளியை நகல் காற்றே க வேண்டும் என்ற ஆதிக்க இதான் இத்தனைக்கும் rnam அதே சமயம் யாஎம்மொழியை காப்பது எண்களின் தலையா நா கடமை அதுக்கு ருகே ஏவல் வந்தாலும் மிதித்து பொய் கொன்டே இருபோம்


ஆரூர் ரங்
மார் 16, 2025 18:14

கருஅநீதி? கரெக்ட் தான்.


venugopal s
மார் 16, 2025 15:59

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் உள்ளது இந்த கட்டுரை!


Kjp
மார் 16, 2025 12:42

அப்போ இதுக்கு முன்னாடி உங்களுக்கு ஞானோதயம் வரவில்லை. எல்லாம் மேடை மாற்றும் வேலை தம்பி.தொகுதி சீரமைப்பு கூட்டத்திற்கு கூவி கூவி அழைக்கின்றனர்.மும்மொழிக்கொள்கை தொகுதி சீரமைப்பு எந்த மாநிலத்திலும் இல்லாத பிரச்சனையை கை எடுத்து கொண்டு மக்களை மடையனாக்க முதல்வர் முயன்று கொண்டிருக்கிறார்


Mahendran Puru
மார் 16, 2025 11:57

முற்றிலும் அர்த்தமற்ற செய்தி. தமிழிலே கணக்கு எழுதுபவர்கள் ரூ என்று எழுதுவது காலம் காலமாக உள்ள பழக்கம்.


KARTHIK PONNUMANI
மார் 16, 2025 11:44

திமுக என்பதன் உண்மையான அர்த்தம் திருடர்கள் முன்னேற்றக் கலவரம் ஆகும். திருடர்களை முன்னேறச் செய்து கலவரம் உருவாக்குபவர்கள் என்று அர்த்தம். இவர்கள் தமிழை வளரச் செய்யவில்லை. அறிவுடையோர் இவர்கள் செய்யும் திருட்டுத்தனம் தெரிந்து கொள்வதை தடுக்கின்றனர். திமுக அதன் கடமையை சரியாக செய்து வருகிறது. திருட்டுத்தனத்தை ஊக்குவிக்கும் கடமையை செவ்வனே செய்கிறது


Mohan Kulumi
மார் 16, 2025 11:42

உண்மையில் இவர்களுக்கு தமிழ் மீது அக்கறை கிடையாது பணத்தின் மீதுதான் அக்கறை .சாதாரண எழுத்தாளராக வாழ்க்கையை தொடங்கிய அரசியல்வாதி பல்லாயிரக்கணக்கான கோடி சம்பாதிப்பதற்கு மூலாதாரமாகஇருந்துள்ளார்.முதலில் திராவிடம் திராவிடர்கள் என்று சொல்லிய அரசியல்வாதிகள் சீமான் அவர்கள் திராவிட பிம்பத்தை உடைத்தற்கு பின் தமிழ் தமிழர்கள் என்று பிதற்றுகிறார்கள் தற்பொழுது திராவிட நாட்டையும் காணாம் திராவிடர்கள் என்ற சொல்லையும் காணாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை