காங்., மூத்த தலைவர் குமரிஅனந்தன் காலமானார்
சென்னை:காங்., மூத்த தலைவர் குமரி அனந்தன் 92, காலமானார். வயது முதுமை காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைபலனின்றி நேற்றிரவு காலமானார்.தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவராக இருந்த குமரி அனந்தன், 5 முறை எம்.எல்.ஏ.,வாகவும், ஒரு முறை எம்.பி.,யாகவும் பதவி வகித்துள்ளார்.இலக்கிய செல்வர் என அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தார். இவரது மகள் தெலுங்கானா முன்னாள் கவர்னரும், பா.ஜ., தமிழக முன்னாள் தலைவருமான தமிழிசை. குமரிஅனந்தன் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார். லோக்சபாவில் தமிழில் கேள்வி எழுப்பும் உரிமையை பெற்று தந்தவர். இவர் 1980 ல் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கி பிறகு அதை காங்., கட்சியுடன் இணைத்தார்.சாத்தான் குளம், ராதாபுரம், திருவெற்றியூர் தொகுதிகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக காங்.,சார்பில் பல முறை யாத்திரை மேற்கொண்டார். குமரி அனந்தனுக்கு 2024ம் ஆண்டு தமிழக அரசால் தகைசால் விருது வழங்கப்பட்டது. அவரது உடல் சென்னை சாலி கிராமத்தில் உள்ள தமிழிசை இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.