உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொள்ளாச்சி வழக்கில் தண்டனை அறிவிப்பு; தலைவர்கள் கருத்து!

பொள்ளாச்சி வழக்கில் தண்டனை அறிவிப்பு; தலைவர்கள் கருத்து!

சென்னை: தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், 9 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு: முதல்வர் ஸ்டாலின்https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=homfsvmp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த 'சார்'கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்.அமைச்சர், தங்கம் தென்னரசுபாலியல் வழக்கில், 9 பேரும் குற்றவாளிகள் என சந்தேகத்திற்கு இடமின்றி அரசு தரப்பு நிரூபித்து உரிய தண்டனையும் பெற்றுத் தந்ததோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிவாரணத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒரு போதும் பொதுச்சமூகம் மன்னிக்காது.தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பல பெண்களின் வாழ்வை சீரழித்து, தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து, அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மிகவும் வரவேற்பிற்குரியது.தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், போக்சோ வழக்குகளும் தற்போது தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், குற்றமிழைக்க முற்படும் கயவர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இத்தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன். முன்னாள் தமிழக பா.ஜ., தலைவர், அண்ணாமலைதமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்முறைக்கும், விரைவாக நியாயம் கிடைக்கவும், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்பா.ம.க., செயல் தலைவர், அன்புமணிபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும்வரை சிறை வரவேற்கத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.த.வெ.க., தலைவர் விஜய்பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது.பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் இனியாவது எவ்விதச் சமரசமுமின்றி உறுதுணையாகஇருக்க வேண்டும். வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.காங்கிரஸ் தலைவர், செல்வ பெருந்தகைஅரசியல்வாதிகளால் தாங்கள் காப்பற்றப்படுவோம் என்று நினைத்திருந்த குற்றவாளிகளுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறது நீதிமன்றத்தித்தின் இந்த தீர்ப்பு.பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து நமது சமூகத்தைப் பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். குற்ற வழக்குகளை நீதித் துறை துரிதமாக விசாரித்து, தவறிழைத்தோருக்கு தண்டனை கொடுக்கும் என்ற எண்ணம் உருவானால், குற்றங்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையும்.வி.சி.க., தலைவர், திருமாவளவன்காயத்திற்கு இடப்படும் மாமருந்தாக பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு உள்ளது. இனிமேல் இது போன்ற சம்பவம் நடைபெறக் கூடாது என்பது இந்த தீர்ப்பு உதவும். தி.மு.க., எம்.பி., கனிமொழிபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை என்ற கடுமையான தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்கள் வெளிவராமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் தங்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்துக்கொள்ள தேவையில்லை.அ.தி.மு.க., வரவேற்புஅ.தி.மு.க., கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, கடும் தண்டனைகளை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. 2026 இ.பி.எஸ்., தலைமையில் ஆட்சி அமைந்ததும் யார் அந்த சார் என்ற கேள்விக்க்கான பதிலும், உரிய நீதியும் நிச்சயம் கிடைக்கும். அன்று திமுக தலைகுனிந்து நிற்கும். தி.மு.க., எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும், இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும். அ.ம.மு.க., பொதுச்செயலாளர், தினகரன்பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. தே.மு.தி.க., பொதுச்செயலாளர், பிரேமலதாபொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம்.இனி வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்க கூடாது என்பதற்கு தீர்ப்பு சான்று ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

சிந்தனை
மே 13, 2025 22:27

குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை என மெத்த படித்தவர்கள் தண்டனை கொடுத்தது சிறந்த புத்திசாலித்தனம்... ஏனென்றால் அவர்கள் சாகும் வரை தினமும் மூன்று வேளை நிம்மதியாக சாப்பிடவும் தூங்கவும், வரி கட்ட இங்கு நிறைய Muttaaள்கள் இருக்கிறார்கள்.... ஒருவேளை சாப்பாட்டுக்கும் வழியில்லாதவர்கள், வீட்டு வாடகை கொடுக்க இயலாமல் வீட்டுக்காரர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டு....


Ramesh Sargam
மே 13, 2025 19:23

அவர்கள் மேல்முறையீடு செல்வார்கள். அதற்குப்பிறகு என்ன தண்டனை என்று பார்க்கவேண்டும். அங்கேயும் இதே தண்டனை என்றால் சந்தோஷப்படவேண்டும்.


spr
மே 13, 2025 17:47

எப்படி பயங்கரவாதம் என்பதற்கு மத இந சாயல் பூசைக்கு கூடாதோ அது போலவே கொடும் குற்றவாளிகள் எவரையும் கட்சிஸ் சாயம் பூசக்கூடாது முதல்வர் தேவையற்ற வகையில் அவர்களை எதிர்க்கட்சியுடன் இணைத்துப் ,பேசுவது அவர் இன்னமும் அரசியல் தலைவராகவே இருக்கிறார் முதலமைச்சர் தகுதி பெறவில்லை என்பதனை உணர்த்துகிறது இது போன்ற குற்றவாளிகளையும் பயங்கரவாதிகளையம் மனிதர்களாகவே எண்ணக்கூடாது மன்னிப்போம் பார்ப்போம் சிறைசாலை சீர் திருத்தும் என்பதெல்லாம் பொய்த்துப் போன நம்பிக்கைகள் மரண தண்டனை பொதுவாக விரும்பத்தக்கதல்ல என்றாலும், அது ஒன்றுதான் மேற்கொண்டு இன்னும் பலர் குற்றம் செய்யவிடாமல் தடுக்கும் சிலராவது அச்சத்தால் குற்றம் செய்யாமல் இருப்பார்கள் அரசுக்கும் வீண் செலவு இல்லை


GMM
மே 13, 2025 17:42

சிபிஐ தண்டனை பெற்று தந்துள்ளது. அரசியல் கூட்டில் இருந்த முன்னாள் மாநில போலீஸ் மற்றும் சிபி சிஐடி மீது மன்றம் தண்டனை கொடுத்து இருக்க வேண்டும். அரசு வக்கீல் தண்டனைக்கு உரியவர். இழப்பீடு குற்றவாளிகள் சொத்தில் இருந்து கைபற்றி கொடுக்க வேண்டும். சட்டத்தில் இடம் இல்லை என்றால் , நீதிபதி சிறப்பு அதிகாரம் பெற்று ஸ்டாலின் மசோதா தனக்கு தானே ஒப்புதல் வழங்கி விரைவில் தீர்வு காண வேண்டும். தண்டனை முழுமை பெற வேண்டும். அடுத்த மேல் முறையீடு செய்ய அஞ்ச வேண்டும். பெண் எண்ணிக்கை குறைவு. அரசு, மன்றம் பெண்கள் பாதுகாப்பாக வாழ உதவ முடியும். பெண் மத மாற்றம், சிறு எண்ணிக்கை சாதிகள் கலப்பு திருமணம் செய்ய தடை செய்ய வேண்டும்.


தமிழன்
மே 13, 2025 17:15

சீமான் கருத்துக்களை சொல்லவில்லையே


yts
மே 13, 2025 17:05

அட இந்த ஜோசப் காஷ்மீர் நடந்த விபத்தைபற்றி வாயை திறக்க காணோம்


Anand
மே 13, 2025 17:04

விடியல், கவிதாயினி, மற்றும் அவர்களின் ஏனைய அடிபொடிகள் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சமயத்தில் இந்த கிரகத்தில் இருக்கவில்லை எனவே அவர்களுக்கு ஏதும் தெரியாது. அந்த சார் யார் என்பது தெரியவே தெரியாது...


Murthy
மே 13, 2025 16:58

அதிமுக ஆட்சியில் சிபிஐ க்கு மாற்றப்பட்டதால் ஓரளவு நியாயம் கிடைத்து உள்ளது ..... அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கியத்து அந்த சார் யாரென்று மறைத்த பெருமைக்கு சொந்தக்காரர்கள் யாரென்று ஊருக்கே தெரியும் . ...


என்றும் இந்தியன்
மே 13, 2025 16:32

முதல்வர் ஸ்டாலின்: பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த சார்கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும். அதிமுகவை திமுக என்று படியுங்கள் அது தான் சரியாக இருக்கும்


krishnamurthy
மே 13, 2025 16:10

மிக சரியான தீர்ப்பு. அண்ணா பல்கலை வழக்கிலும் சி பி ஐ விசாரணைக்கு மாற்றி துரித முடிவு காண வேண்டும் .


சமீபத்திய செய்தி