உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லேப் அமைத்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தயாரிக்கின்றனர்: பா.ஜ., நிர்வாகி பகீர் புகார்

லேப் அமைத்து மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தயாரிக்கின்றனர்: பா.ஜ., நிர்வாகி பகீர் புகார்

காரைக்குடி: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில், அதிக அளவில் போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக, பா.ஜ., சிறுபான்மை பிரிவு செயலர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்தார். காரைக்குடியில் நடந்த, போதை விழிப்புணர்வு யாத்திரையில் பங்கேற்ற பின், இப்ராஹிம் கூறியதாவது: இளையான்குடி மற்றும் கடற்கரை பகுதிகளான அம்மா பட்டினம் அதிராம்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ‘மெத்தபெட்டமைன்’ என்ற போதைப்பொருளை உற்பத்தி செய்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும், சிறிய ‘லேப்’ அமைத்து, ஒன்றரை கோடி ரூபாய் முதல் இரண்டு கோடி ரூபாய் வரை, மாத வருமானம் ஈட்டுகின்றனர். இதற்கு பின், எந்த அமைப்பு இருக்கிறது என்பதை அரசு கண்டறிய வேண்டும். ஆனால், போலீஸ் வேடிக்கை பார்க்கிறது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் தான், போதைப்பொருள் தயாரிப்பு அதிகம் நடைபெறுகிறது. சமூக பொறுப்பை உணர்ந்து, பா.ஜ., சார்பில் விழிப்புணர்வு செய்து வருகிறோம். ‘பொது சிவில் சட்டம், முஸ்லிம்களுக்கு எதிரானது’ என த.வெ.க.,வும், தி.மு.க.வும் கூறி வருகின்றன. முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்காமல், உணர்வுகளை துாண்டும் அரசியலை செய்கின்றனர். பொது சிவில் சட்டம், திருமணத்தை பதிவு செய்ய சொல்கிறது. இதில் என்ன தவறு? மதத்தால், மொழியால், ஜாதியால் யாரையுமே பா.ஜ., பிளவுபடுத்தி பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Arul Narayanan
அக் 09, 2026 09:27

தவெக திமுகவை விட அதிக அளவில் முஸ்லிம் எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு மைனாரிட்டி அரசை நடத்தி வருகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை