உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., பிரமுகர் மீதான பாலியல் புகார்; விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்!

தி.மு.க., பிரமுகர் மீதான பாலியல் புகார்; விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்!

சென்னை: அரக்கோணத்தில் திருமணம் செய்து ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்ததாக கல்லுாரி மாணவி குற்றச்சாட்டி உள்ளார். தி.மு.க., பிரமுகர் தெய்வச்செயல் மீதான வழக்கை, தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்தது.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த காவனுாரை சேர்ந்த தெய்வசெயல்,40, தி.மு.க., ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தார். இவர் கல்லூரி மாணவி ஒருவரை காதலிப்பதாக நாடகமாடி, கடந்த ஜன., 31ல், 2வதாக திருமணம் செய்து கொண்டார். அவர் தன்னை 2 மாதமாக அடித்து துன்புறுத்தி, தி.மு.க., பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சித்ததாகக் கூறிய அந்த மாணவி போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து கண்டன அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து மத்திய ஒன்றிய தி.மு.க., இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து தெய்வச்செயல் நீக்கப்பட்டார். இந்நிலையில் இன்று (மே 21) தேசிய மகளிர் ஆணையம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தி.மு.க., பிரமுகர் மீது கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகார் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. இதில் அவர் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் வற்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளும் அடங்கும்.குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை கருத்தில் கொண்டு தமிழக டி.ஜி.பி.,க்கு உடனடியான, பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளோம். பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், எந்தவொரு அரசியல் தலையீட்டையும் தடுப்பது குறித்தும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம். மூன்று நாட்களுக்குள் எப்.ஐ.ஆர்., நகலுடன் விரிவான நடவடிக்கை அறிக்கையையும் கோரியுள்ளோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

sankaranarayanan
மே 21, 2025 18:29

திராவிட மாடல் அரசின் ஆட்சியில் தங்கு தடையின்றி நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்துகொண்டே இருக்கும் ஒரே ஒரு தொழில் இது ஒன்றுதான்.மக்களின் குரல்கள் எங்குமே எடுபடவில்லை.இப்போது பார்க்கலாம் தேசிய மகளிர் ஆணையம் எடுத்த வீரதீர செயலை பாராட்டுவோம் வெற்றி பெறுவோம்.


என்றும் இந்தியன்
மே 21, 2025 17:46

இது அநியாயம் அக்கிரமம் வெறும் ஒருவரை கைகாட்டவேண்டாம் திமுக என்றால் திருடர்கள் முரடர்கள் கயவர்கள் கழகம் என்று பொருள்படும் இப்படி ஒரே ஒருவர் மீது மட்டும் குறை சொல்வது மற்ற உறுப்பினர்களை அவமானப்படுத்துவது போலாகும். அவர்கள் கொள்கையே அது தான்.


chandru
மே 21, 2025 17:37

பேரப்பாரு.....வெளக்கமாத்துக்கு பட்டுக் குஞ்சம்ன்னு பேருவெச்சமாதிரி


Kanagaraj M
மே 21, 2025 17:14

திமுகவில் PTR பழனிவேல் தியாகராஜன் அவர்களை தவிர மற்ற எல்லோரும் திருடர்களாகவே உள்ளனர் .


sundarsvpr
மே 21, 2025 14:30

பாலியர் புகார் ஒரு பெரிய தப்பு என்று கருதுவது தவறு. பல அமைச்சர்கள இவர்களை தவிர பெரிய புள்ளிகள் பலர் ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளனர். இவைகள் சிறிய குற்றங்களாக கருதுவதால் அவர்களை கட்சியில் இருந்து வெளியேற்ற கட்சி முடிவு எடுக்கவில்லை . அரசு பதவியில் இருந்தும் நீக்கமுடியவில்லை. தி மு தொண்டர்களும் கட்சி தலைமையை நிர்பந்திக்கவில்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 21, 2025 14:24

அசிங்கப்பட்டான் கிம்ச்சை மன்னன் ......


நாஞ்சில் நாடோடி
மே 21, 2025 14:23

திமுகவினர் பெரியார் கொள்கைகளை தூக்கி பிடிப்பதற்கு காரணம் பாலியல் குற்றம் செய்யத்தான்...


Palanisamy Sekar
மே 21, 2025 14:17

இந்த மாதிரியான கட்சிக்காரர்களின் அட்டூழியத்தை தட்டிக்கேட்க போலீசின் கைகளையும் கட்டிவைத்த திராவிட மாடல் ஆட்சிக்கு மாபெரும் தலைகுனிவு. இந்தமாதிரியான கேவலத்தோடு ஆட்சி செய்யணுமா என்ன? ராஜினாமா செய்துவிட்டு போகணும் இந்த திமுக அரசு. இதில் நய்யாண்டி வேறு எதிர்க்கட்சி தலைவர் தன் மீது படிந்துள்ள சேற்றை பற்றியெல்லாம் கவலையில்லாமல் பிறரை கேலி செய்கின்றார் இந்த மேக்கப் முதல்வர்


VSMani
மே 21, 2025 15:57

ராஜினாமா செய்தது எல்லாம் அந்தக்காலம். சட்டையைக்கிழிச்சாவது முதலமைச்சர் ஆகி 5 வருடம் யார் காலில் கையிலாவது விழுந்து ஆட்சியை தக்கவைத்து மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது இந்த காலம்.


Barakat Ali
மே 21, 2025 14:02

பொள்ளாச்சி தீர்ப்பு வந்தப்ப எடப்பாடியாரை சீறி அடித்த துக்ளக்கார் அவமானத்தால் தலைகுனிந்திருக்க வேண்டும் .......


Barakat Ali
மே 21, 2025 13:48

பொள்ளாச்சி விவகாரத்தில் தீர்ப்பு வந்த பிறகு துக்ளக்கார் என்னென்ன பேசினார் ???? துக்ளக்காரின் சார்கள் என்றால் துணிந்து எந்தத் தப்பையும் செய்யலாமா ???


சமீபத்திய செய்தி