உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஒருவர் கைது!

ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஒருவர் கைது!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூரில் இருந்து நேற்று அதிகாலை சென்னை சென்ற உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்.3. பெட்டியில் தஞ்சாவூரில் உள்ள நாகை ரோடு வேட்டுக்கார தெருவை சேர்ந்த சுந்தரவேல், 57, என்பவர் பயணித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆனைக்காரன்சத்திரம்- வல்லம்படுகை இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் சுந்தரவேல் அதே பெட்டியில் பயணித்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் அலறல் கேட்டு எழுந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், சுந்தரவேலுவை பிடித்து ரயிலில் பாதுகாப்புக்கு வந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் சுந்தரவேலுவை இறக்கிய போலீசார், அவரை மயிலாடுதுறை ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சுந்தரவேலுவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ