உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ்காரர் கொலையில் தேடப்பட்ட கஞ்சா வியாபாரி மீது துப்பாக்கிச்சூடு

போலீஸ்காரர் கொலையில் தேடப்பட்ட கஞ்சா வியாபாரி மீது துப்பாக்கிச்சூடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: உசிலம்பட்டியில் போலீஸ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரி பொன்வண்ணன், போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தார். அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் டிரைவராக இருந்தவர், கடந்த 27 ல் நண்பர் ராஜாராம், 31, என்பவருடன், முத்தையம்பட்டி மதுக்கடையில் மது வாங்கி அருகில் உள்ள கடையில் குடிக்க சென்றார். அங்கு தேனி மாவட்ட கஞ்சா வியாபாரி நாவார்பட்டி பொன்வண்ணன் உள்ளிட்ட சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t5anar7o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பொன்வண்ணன் ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால், அவருக்கு முத்துக்குமார் அறிவுரை கூறினார். இதுதொடர்பாக, அவருக்கும், பொன்வண்ணன் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், முத்துக்குமார் தாக்கப்பட்டார். இதுகுறித்து, போலீசாருக்கு மொபைல் போனில் முத்துக்குமார் தகவல் தெரிவித்தார்.போலீசார் வருவதை அறிந்து தகராறு செய்தவர்கள் டூ - வீலர், மொபைல் போன் உள்ளிட்டவற்றை விட்டு தப்பினர். முத்துக்குமாரை வீட்டிற்கு செல்லுமாறு கூறிவிட்டு, போலீசார் சென்றனர். பின்னர், முத்துக்குமாரும், ராஜாராமும் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து வந்த கும்பல், இருவரையும் ஆயுதங்களால் தாக்கியது.கீழே விழுந்த முத்துக்குமார் தலையில் கல்லை போட்டுக் கொலை செய்தது கும்பல். ராஜாராம் படுகாயமடைந்தார். கொலை தொடர்பாக, பொன்வண்ணன் உள்ளிட்டோரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் பொன்வண்ணன் தேனி மாவட்டம் கம்பம் அருகே போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தார். உடனடியாக, அவருக்கு கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு ஆண்டிப்பட்டி அருகே உள்ள கானா விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பொன்வண்ணனை போலீசார் அழைத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

c.mohanraj raj
மார் 30, 2025 12:02

இதெல்லாம் ஒரு நாடகம் என்று நினைக்கின்றேன் அவர் தகவல் கொடுத்தபொழுது கைது செய்திருந்தால்


Iniyan
மார் 29, 2025 23:22

தமிழக போலீஸாரின் தரம் திராவிட மாடல் ஆட்சியில் படு பாதாளத்தில் போய் விட்டது


தமிழ்வேள்
மார் 29, 2025 21:07

மெத் விற்று கல்லா கட்டும் பெத்த அண்ணா சிக்க அண்ணா கும்பலை எப்போது என்கவுண்டர் செய்யப்போகிறது டுமீல் நாடு போலீசு?


Ramesh Sargam
மார் 29, 2025 19:13

சில்லறை வியாபாரியை போட்டதுபோல், மொத்த வியாபாரி DMK கண்மணிகளை எப்ப போட்டு தள்ளுவீங்க?


veerasingam
மார் 29, 2025 19:05

குடிகாரர்கள் மதுக்கடையில் மது வாங்கி அருகில் உள்ள கடையில் குடிக்க சென்றனர். இறந்தவர் போலீஸ்கரர் ஆகிவிட்டார் ஒருவர் கொலையாளியாகி விட்டார்.


Dharmavaan
மார் 29, 2025 19:02

எதற்கு காயம் .சுட்டுத்தள்ளாமல்


Padmasridharan
மார் 29, 2025 18:46

மொத்தத்துல மதுவினால் ஒரு உயிர் பலியானது. இன்னொரு உயிர் encounter இல்.. அங்கு duty செய்யாத காவலருக்கு அரசு பணமும், இன்னொருவருவருக்கு தண்டனையும் கொடுக்கும். .


m.arunachalam
மார் 29, 2025 17:48

களையெடுக்கும் வேலை தொடர்ந்து நடக்க வேண்டும் . ஜாமீன் கொடுத்து கெடுத்துக்கொள்ள கூடாது .


Bala
மார் 29, 2025 16:46

பெரும்பாலான காவலர்கள் பொதுமக்களை மரியாதை குறைவாக பேசுகின்றனர். சிலர் அதை தாங்கிக கொள்ள முடியாமல் எதிர்த்து கேள்வி கேட்டால் அடிக்கின்றனர். காவல்துறைக்கு அதிகார திமிர் அதிகம்.


சமீபத்திய செய்தி