உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் தெரியாவிட்டால் அரசு வேலையை இழக்கணும்?: பரிசீலிக்கலாம் என உயர் நீதிமன்றம் கருத்து

தமிழ் தெரியாவிட்டால் அரசு வேலையை இழக்கணும்?: பரிசீலிக்கலாம் என உயர் நீதிமன்றம் கருத்து

மதுரை : மின்வாரிய பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறாத ஊழியரை, மீண்டும் வேலையில் அனுமதிக்கும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்த இரு நீதிபதிகள் அமர்வு, 'தமிழில் போதிய அறிவு பெற தவறினால், ஒருவர் அரசு பணியில் இருக்கும் உரிமையை இழக்க நேரிடுமா என்பது பரிசீலிக்கப்பட வேண்டிய விவகாரம்' என, கருத்து தெரிவித்தனர். தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்குமார். இவர், மின்வாரியத்தில் இளநிலை உதவியாளராக, 2018ல் பணியில் சேர்ந்தார். பள்ளியில் தமிழ் படிக்கவில்லை எனில், டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தமிழ் தேர்வில் இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்பது மின்வாரிய பணி விதிமுறை. ஜெய்குமாரால், அத்தேர்வில் குறித்த காலத்தில் தேர்ச்சி பெற முடியவில்லை. அதனால், பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதை ரத்து செய்து, பணியில் தொடர அனுமதிக்க உத்தரவிடக்கோரி, அவர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

கடந்த, 2022ல் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் பெற்றோர் தமிழர்கள். அவரது தந்தை கடற்படை அதிகாரியாக இருந்தார். அவர் பல்வேறு இடங்களில் பணிபுரிந்ததால், மனுதாரரும் பிற மாநில பள்ளிகளில் படிக்க வேண்டியிருந்தது. அச்சூழலில் ஹிந்தியை இரண்டாம் மொழியாக படித்தார்.சம்பந்தப்பட்ட நபருக்கு தமிழில் போதிய அறிவு இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. போடியில் பிறந்து, மின்வாரியத்தில் பணிபுரிந்த மனுதாரர், தமிழில் போதிய அறிவு பெற்றிருப்பார். இம்மண்ணின் பக்கா தமிழனாக இருக்கும் மனுதாரரை துாக்கி எறிவது சரியல்ல. மனுதாரர், 2022 ஜூனில் நடந்த தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றார் என்பது உண்மை. அவரை மீண்டும் பணியில் சேர்த்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட தேதியிலிருந்து வரன்முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, தமிழக மின்வாரிய தலைவர், தலைமை பொறியாளர் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஆர்.பூர்ணிமா அமர்வு நேற்று அளித்த உத்தரவு: தமிழகத்தில் தமிழில் புலமை இல்லாத ஒருவரை அரசு பணியில் நியமனம் செய்வது தொடர்பான பிரச்னை இது. தமிழில் போதிய அறிவு பெற தவறினால், ஒருவர் அரசு பணியில் இருக்கும் உரிமையை இழக்க நேரிடுமா என்பது பரிசீலிக்கப்பட வேண்டிய விவகாரம். தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து, விசாரணை ஏப்., 7க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Saravana kumar
மார் 11, 2025 22:33

சிபிஎஸ்இ பள்ளியில் படித்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஓட்டு போடலாமா என்பதையும் நீதிபதி தெளிவுபடுத்த வேண்டும்


Just imagine
மார் 11, 2025 13:58

ஒரு அமைச்சர் ஸ்மார்ட் போர்டில் வாழ்துகள் பிழையாக எழுதினார் .... அவருக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும் தானே .


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 11, 2025 13:07

அரசு விரும்பினால், விரும்பிய வழக்கில், நீதிபதியின் கருத்து எப்போது, எந்த சந்தர்ப்பத்தில் என்ன சொல்லப்படவேண்டும் என்று நிர்ணயிக்கலாம் போல ??


Rengaraj
மார் 11, 2025 12:00

தமிழக அரசின் கொள்கை, அந்த கொள்கையின் வெளிப்பாடான தமிழக அரசின் திட்டங்கள், அந்த திட்டங்கள் செயல்படுத்த ஏதுவாக இருக்க வேண்டிய அரசின் சட்ட விதிகள் இவை அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்ற அடிப்படையில் பேச்சு வடிவில் மட்டும் இன்றி எழுத்து வடிவில் கூட தமிழை பிழையில்லாமல் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காத்தான். அரசு ஆட்சி மொழியாக தமிழை வைத்திருக்கிறது. இங்கே எத்தனை அதிகாரிகளுக்கும், மற்றும் பணியாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை பிழையில்லாமல் தமிழில் தயாரிக்க தெரிந்திருக்கிறார்கள்? முறையாக மக்களுக்கு புரியும்வண்ணம் தமிழில் விளக்க தெரிந்துவைத்திருக்கிறார்கள்? அவர்கள் முறையாக மக்களுக்கு சொல்லிக்கொடுக்க தெரிந்து வைத்திருந்தால் ஏன் அரசு அலுவலங்களில் இத்தனை கூட்டம் ? விண்ணப்பம் எழுதி தருகிறேன் என்று சொல்லி அதையும் ஒரு பிழைப்பாக வைத்திருக்கிறார்கள் ஒரு கூட்டம் ? நீதிமன்ற வளாகங்களில் வக்கீல் குமாஸ்தா, ஆவண எழுத்தர் என்று சொல்லிக்கொண்டு பல்வேறு ஆவணங்களை தயாரித்து தருவதாக சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் மக்களிடம் பணம் வசூலிக்கிறது. நம் மக்களுக்கு அடிப்படை சட்டம்கூட தெரிந்துவிடாமல் செய்துஇருக்கிறார்கள். தமிழில் பிழையின்றி ஒரு ஆவணம் , விண்ணப்பம் கூட எழுத தெரியாத அளவுக்கு தமிழை வளரச் செய்திருக்கிறார்கள் என்றால் அது யார் குற்றம் ?


Natarajan Ramanathan
மார் 11, 2025 11:50

அப்படியென்றால் முதல்வரைகூட பதவிநீக்கம் செய்யவேண்டும்.


பாலகிருஷ்ணன்.
மார் 11, 2025 11:25

35 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிபந்தனையுள்ளது. சுகாதாரத் துறையில் பணிபுரிகையில் அங்கிருந்த மருத்துவர் வட மாநிலத்தவராகையால் அவர் தமிழ் கற்று தேர்வு எழுதினார் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லோருக்கும் எந்த மாநில அரசில் பணிபுரிந்தாலும் அந்தமாநில மொழியில் பணிக்காக ஊதிய உயர்வுக்காக எழுதவேண்டும்.


ஆரூர் ரங்
மார் 11, 2025 11:23

துண்டுசீட்டைப் பார்த்தாவது தமிழை தெளிவாக வாசிக்கத் தெரிந்தால் போதும். அதுவும் தெரியாவிட்டால் பூனை மேல் மதில்.


Anbuselvan
மார் 11, 2025 11:05

அப்போ இது IAS மற்றும் IPS அதிகாரிகளுக்கும் பொருந்தும் அல்லவா?


baala
மார் 11, 2025 09:44

அருமை.


Kanns
மார் 11, 2025 09:11

TN State Govt Jobs Must be Reserved to Native Tamil People from Anywhere With Condition to Learn Tamil Within 2-3yrs. At Same State Jobs Must be Denied to NonNatives Even if they Know Tamil or With Maxm 25% in General Quota


புதிய வீடியோ