உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீண் விளம்பரங்களுக்காகச் செலவிடவா மக்கள் வரிப்பணம்? முதல்வரை கேட்கிறார் அண்ணாமலை

வீண் விளம்பரங்களுக்காகச் செலவிடவா மக்கள் வரிப்பணம்? முதல்வரை கேட்கிறார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தனது தந்தையின் சிலையை வைக்கத் தெரிந்த முதல்வர் ஸ்டாலினுக்கு நமது குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி வழங்கும் அங்கன்வாடி கட்டடங்கள் கட்ட ஏன் மனம் வரவில்லை? என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை; வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சாலைப்பேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் கட்டடத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, போதிய வசதிகள் இன்றி இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக, இந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி சுவர், இன்று அதிகாலையில் இடிந்து விழுந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, அதிகாலை என்பதால், குழந்தைகள் யாரும் இல்லாமல், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zq3u6fu1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகம் முழுவதும், 7,441 அங்கன்வாடி மையங்கள், தனியாருக்குச் சொந்தமான கட்டடங்களில் இயங்கி வருகின்றன. அங்கன்வாடி மையங்களுக்குச் சொந்தக் கட்டடம் கட்ட, தமிழக மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. தனியார் கட்டடங்களில் இது போல விபத்துகள் நேரிடும்போது, குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? ஊர் ஊராகச் சென்று, தனது தந்தையின் சிலையை வைக்கத் தெரிந்த முதல்வர் ஸ்டாலினுக்கு நமது குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி வழங்கும் அங்கன்வாடி கட்டடங்கள் கட்ட ஏன் மனம் வரவில்லை? வீண் விளம்பரங்களுக்காகச் செலவிடவா மக்கள் வரிப்பணம்? தமிழகம் முழுவதும், பள்ளிகளுக்கு முறையான கட்டடங்கள் இல்லை. திமுக ஆட்சியில் கட்டப்படும் கட்டிடங்களும், முதல்வர் திறந்து வைத்த அடுத்த நாளே இடிந்து விழுகின்றன. அடிப்படைக் கல்வி வழங்கும் அங்கன்வாடி மையங்கள், வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. ஒட்டுமொத்தமாக, கல்வித் துறையில் தனியார்மயத்தை ஊக்குவித்து, தனியார் பள்ளிகள் நடத்தும் திமுகவினர் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே, தமிழக சமூக நலத்துறையும், பள்ளிக் கல்வித்துறையும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உடனடியாக, தமிழகம் முழுவதும், தனியார் கட்டடங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்குச் சொந்தக் கட்டடம் அமைக்க நிதி ஒதுக்கி, அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும். திமுகவினர் சம்பாதிப்பதற்காக, ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பாதுகாப்பைப் புறக்கணிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

ManiMurugan Murugan
ஆக 23, 2025 23:55

அருமை அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோகன் கட்சி தி மு கா கூட்டணிக்கு மக்கள் நலத்தில் அக்கறை கிடையாது மின்சார பகிர்மானத்தைப் பற்றி மத்தியரசு சொல்கிறது அத்தகைய நீரை யில் உள்ளது நிர்வாகம் இதில் அடுத்த முதலமைச்சர் தேர்வு என்று வசனம் ரொம்ப அவசியம் மின்சாரத் துறை அமைச்சர் இதுவரை எந்தப் பதிவும் போடவில்லை ஒவ்வொரு மாவட்ட மின்சார எகிப்தின் நிலையங்களின் செயல்பாட்டை கண்டறிய வேண்டுிம் வரவு செலவுக் கணக்கு வெளியிட வேண்டும் இப்படி ஒவ்வொரு துறையையும் மற்றவர்கள் சரிப்பார்ப்பது என்றால் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி எதற்கு ஆட்சியில் உள்ளது பொய் ஊழல் பித்தலாட்டம் பணணுவதற்கா


மனிதன்
ஆக 23, 2025 22:04

அண்ணாமலை சார்... அது கட்டவுட்டுக்கும், கேமராவுக்கும் போஸ் கொடுத்து, நாளிதழ்கள் உட்பட இந்தியாவில் இருக்கின்ற அனைத்து ஊடகங்களுக்கும் விளம்பரம் கொடுப்பதையும், அதானி அம்பானிக்காக நாடு நாடாக சுற்றுலா செல்தையும் கேளுங்களேன்... நீங்களும் காணாமல் போய்விடுவீர்கள்...பிறகு பாராளுமன்றத்தில் அண்ணாமலை எங்கே? என்ற கேள்விகளும் கேட்கும்...


kamal 00
ஆக 24, 2025 05:32

அது உங்க மாமன் புத்தி.... அண்ணாமலை அடி சரவெடி


அப்பாவி
ஆக 23, 2025 20:46

நைனா கேக்க வேண்டிய கேள்விகள்.


kamal 00
ஆக 24, 2025 05:33

அப்போ நீ யாரு ... எங்க மலை எப்போதும் கெத்து....


Gnana Subramani
ஆக 23, 2025 20:19

அண்ணாமலை தனக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்பை வேண்டாம் என்று திருப்பி அனுப்பினால் கூட அரசுக்கு பல கோடி மிச்சமாகும்


ramesh
ஆக 23, 2025 21:30

இப்போது தான் மாநில தலைவர் இல்லையே . வெறும் கட்சி உறுப்பினர் தானே பிறகு ஏன் சிறப்பு பாதுகாப்பு . இது அரசுக்கு வீண் செலவு தான்


kamal 00
ஆக 24, 2025 05:34

கிட்ட எலும்பு வாங்காம ஓட்டு போடுங்க....


pakalavan
ஆக 23, 2025 20:04

அமித்சா இங்க பூத்து கமிட்டிக்கு வந்துட்டு போன செலவு 20 கோடி


kamal 00
ஆக 24, 2025 05:35

நீ அந்த பால் பூத் ல மிரட்டி காசு வாங்குன திராவிடர் தானே


முதல் தமிழன்
ஆக 23, 2025 19:30

வீண் விரயம் பண்ணுவதில் போட்டிதானே ஒழிய வேறென்ன? இதில் எந்த ஆளும் அரசும் விதி விலக்கல்ல.


திகழ்ஓவியன்
ஆக 23, 2025 19:58

ரூ.8400 கோடி விமானம் யாருடைய வரிப்பணம்


kamal 00
ஆக 24, 2025 05:37

சிலை, சினிமா, சிங்காரம், சீட்டு கட்டு, திராவிட தாரக மந்திரம்


சத்யநாராயணன்
ஆக 23, 2025 18:37

பிரதம மந்திரியை கேட்டு அவர்கள் அனுப்பிய பணத்தில் சிலை வைத்தார்களா உருப்படியான காரியங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் உடனே பிரதமரைக் கேள் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் கொடுக்க வேண்டும் என்று பேசுவது அநாகரீகம்


திகழ்ஓவியன்
ஆக 23, 2025 18:36

கவுன்சிலர் MLA MP இது எதுவும் இல்லாத உமக்கு தினம் 2 கோடி செலவு பிடிக்கும் Z பாதுகாப்பு ஏன் கொடுக்கணும்? இது யார் வீடு வரி பணம் , இப்ப தான் நீங்க தலைவர் இல்லை .அதை நீங்க வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே.


G Mahalingam
ஆக 23, 2025 19:04

திமுகவினர் எப்படி பட்டவர்கள் நாடறியும். ரவுடிகள் அபகரிப்பு அதிகம் உள்ள கட்சி. இப்போது திமுக போலீசாரும் உடந்தை.


kamal 00
ஆக 24, 2025 05:40

கண்டிப்பா நீ அணில் பாலாஜி கொடுக்கு தான்..


P.M.E.Raj
ஆக 23, 2025 18:29

இந்திய வரலாற்றில் எங்குமே காணமுடியாத ஒரு கோமாளி ஆட்சி நடக்கிறதென்றால் அது தமிழ்நாட்டில்தான். திமுக அதிகாரத்திற்கு வந்தவுடன் தமிழ்நாடே அவர்களின் சொத்துமாதிரி நினைப்பு. அதனால்தான் நாள்தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. இவர்களை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்பவேண்டும்.


VARUN
ஆக 23, 2025 17:45

முதலில் பிஜேபி ஆளும் சென்டெர் கவர்மெண்ட் செய்யும் வீண் ஆடம்பர செலவுகளை குறைக்க சொல்வதற்கு அண்ணாமலைக்கு முதுகெலும்புஉண்டா .


முக்கிய வீடியோ