உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடத்துவது நல்ல ஆட்சி என்று முதல்வர் ஸ்டாலினை யாரோ நம்ப வைத்துவிட்டார்கள்; இ.பி.எஸ்.,

நடத்துவது நல்ல ஆட்சி என்று முதல்வர் ஸ்டாலினை யாரோ நம்ப வைத்துவிட்டார்கள்; இ.பி.எஸ்.,

சென்னை: 'நீங்கள் நடத்துவது நல்ல ஆட்சி தான் என்று முதல்வர் ஸ்டாலினை யாரோ நம்ப வைத்து விட்டார்கள்' என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., விமர்சித்துள்ளார். அவரது அறிக்கை; ஸ்டாலின் அவர்களே... நீங்கள் எங்கு இருந்தாலும், உங்க எண்ணம் முழுக்க என் எழுச்சிப்பயணத்தைச் சுற்றியே தான் இருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். 'உங்களுடன் ஸ்டாலின்' ன்னு ப்ரோமோஷன் பண்ணியிருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் ஜெயலலிதாவின் திட்டத்தை காப்பி பேஸ்ட் செய்துள்ளீர்கள் என்பதை உரக்க சொல்லி இருக்கிறேன், அதுதான் நீங்கள் விரும்பும் விளம்பரமா?'சொந்தமாக ஒரு திட்டத்தை யோசித்து நிறைவேற்ற வக்கில்லாமல், இப்படி அ.தி.மு.க., ஆட்சியின் ஜெயலலிதா திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஓட்டுறீங்களே... உங்களுக்கு வெட்கமாக இல்லையா?' என்று தானே நான் கேட்டேன்? அதற்கு என்ன பதில் சொல்வீங்க? ஊர் ஊராக கருப்பு பெட்டி தூக்கித் திரிந்து ஏமாற்றியது போதாது என்று, ஒரு துண்டுசீட்டில் 46 பெயர்களை அச்சடித்து யாரை ஏமாற்றுகிறீர்கள்? இந்த 46 சேவைகளையும் நீங்கள் நான்கு ஆண்டுகள் செய்யவே இல்லை என்று அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் தானே இது?பத்து தோல்வி என்று என்னைப் பார்த்து சொல்லும் முன்னர் உங்கள் வரலாற்றைப் பார்த்திருக்க வேண்டாமா? 2011 சட்டமன்ற தேர்தலில், எதிர்க்கட்சி ஆகக் கூட வக்கில்லாமல் மண்ணைக் கவ்வி ஓட்டம் பிடித்தது நீங்கள் தானே? அதன் பிறகு வந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., படுதோல்வி. 2012ல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தோல்வி. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நின்றால் டெபாசிட் கூட தேறாது என்று போட்டியிடாமல் ஓடியது தி.மு.க., 2013ல் ஏற்காடு இடைத்தேர்தல் தோல்வி. 2014 லோக்சபா தேர்தல். ஒரு தொகுதி கூட ஜெயிக்க முடியாமல் மீண்டும் மண்ணைக் கவ்வியது உங்கள் தி.மு.க., 2015 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பக்கமே தி.மு.க., வரவில்லை. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி.2016 சட்டமன்ற தேர்தல். தமிழ்நாடு மறக்குமா? ஒரு ஓட்டை சைக்கிள தூக்கிக் கொண்டு 'எடுத்த நாள் முதல், இந்த நாள் வரை, வண்டியை விடவில்லை' ன்னு ஊர் ஊராக ஒட்டிச் சென்று, தமிழ்நாட்டில் ஒரு டீக்கடை விடாமல் டீ குடித்தும், மக்கள் யாரும் உங்களை கண்டுக்கவே இல்ல. அ.தி.மு.க., ஆட்சி, ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலர்ந்தது. நீங்கள் சட்டையைக் கிழித்துக் கொண்டு பேரவையில் இருந்து ஓட்டம் பிடித்தது தான் மிச்சம்! 2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வந்ததே... அதில் கூட மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட படுதோல்வி கட்சி தானே உங்கள் தி.மு.க.,?இப்படி ஒரு தேர்தல் வரலாற்றை வைத்துக்கொண்டு, என்னைப் பற்றி ஸ்டாலின் பேசலாமா? இதில் சினிமா வசனம் வேறு... 'அதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்ட' என்று கூறுகிறார்... ஸ்டாலின் அவர்களே... 'நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட' என்பதைத் தான் மக்கள் சொல்லிட்டு இருக்காங்க! இந்த திரைப்பட காமெடி ஒன்று வருமே... 'யாரோ இவன் மூளைக்குள்ளே போய் இவனை டாக்டர் ன்னு நம்ப வெச்சுட்டாங்க' என்று.... அது மாதிரி, யாரோ சிலர் ஸ்டாலின் மூளைக்குள்ளே போய், 'இவர் நடத்துவது நல்ல ஆட்சி தான்' என்று நம்ப வைத்துவிட்டார்கள் போல...Good Bye சொல்லப்போறாங்களாம் மக்கள். மீண்டும் சொல்கிறேன், 'ஸ்டாலின் அவர்களே.. அது கண்ணாடி!' அன்பார்ந்த தமிழக மக்களே, நான் எந்தத் தொகுதிக்கு வந்தாலும், நீங்கள் பெருந்திரளாக வந்து, விண்ணைப் பிளக்கும் அளவிற்கு சத்தமாக சொல்லும் அந்த ஒரு சொல், ஸ்டாலின் காதுகளுக்கு நன்றாக கேட்கிறது. நீங்கள் சொல்லும் ' பை பை ஸ்டாலின்' அவரை கதற விடுகிறது. இன்னும் கதற விடுவோமா? 234 தொகுதிகளிலும் சொல்வோமா?, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Pandianpillai Pandi
ஜூலை 16, 2025 20:06

ஒன்றினைவோம் வா என்று அழைத்து மக்களை சந்தித்து அவர்களது பிரச்சனையை ஆட்சிக்கு வந்தவுடன் தீர்த்து வைத்தார். எல்லா நிலைகளிலும் இளைஞர்களுக்கு உறுதுணையாக முதல்வர் இருக்கிறார். மகளிருக்கு உற்ற துணையாக அரசு திகழ்கிறது. விவசாயம் நல்ல வளர்ச்சியடைந்துள்ளது. புலம் பெயர்ந்தவர்கள் தற்போது பூர்வீக இடங்களில் விவசாயத்தை சிறப்பாக செய்கின்றனர். தமிழர்கள் தன்மானத்தோடு வாழ்கிறார்கள். நடப்பது நல்ல ஆட்சி என்று நல்ல மனசாட்சி உள்ளவர்களுக்கு தெரிகிறது. மனசாட்சியை கொத்தடிமையாக்கிவிட்ட தாங்கள் எங்கள் தலைவரை விமர்சனம் செய்ய தகுதியில்லாதவர்.


Ramesh Sargam
ஜூலை 16, 2025 19:52

நடத்துவது நல்ல ஆட்சி என்று முதல்வர் ஸ்டாலினை யாரோ நம்ப வைத்து விட்டார்கள். இப்பொழுது முதல்வர் அவர் ஏமாந்தது போதாது என்று தான் நடத்துவது நல்ல ஆட்சி என்று கூறி மக்களையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். ஆனால் மக்கள் ஏமாறக்கூடாது.


saravan
ஜூலை 16, 2025 19:21

பேச கத்துக்கிட்டானய்யா மனுஷன்


Kadaparai Mani
ஜூலை 16, 2025 18:12

In the whole world only AIADMK is the only force can defeat DMK. You are not thinking about DMK .Stalin is not equal to Karunanithi . DMK may not secure even opposition leader post in 2026. EPS did good work in bringing back the enthusiasm among the aiadmk cadre and see the crowd in first leg of his tour.


angbu ganesh
ஜூலை 16, 2025 18:10

தில்லாலங்கடி- ல சந்தானத்தை ஜெயம் ரவி ஏமாத்தறது மாதிரியா


Naga Subramanian
ஜூலை 16, 2025 17:57

DMK always follow "Buy Buy people" formula only. Hence, it is the time to say "Bye-bye Stalin & DMK Govt"


என்றும் இந்தியன்
ஜூலை 16, 2025 17:57

Boy Boy Stalin Bye Bye


என்றும் இந்தியன்
ஜூலை 16, 2025 17:55

நடத்துவது நல்ல ஆட்சி தான் என்று உறுதியாக சொல்லமுடியும்.நடப்பது தெலுங்கு கூட்ட ஆட்சி தெலுங்கில் நல்ல என்றால் கருப்பு என்று அர்த்தம்.தெலுங்கு முதல்வர் "நடத்துவது நல்ல - கருப்பு ஆட்சி". அப்போ ஆட்சி சர்வநாச நாசமான ஆட்சியாக தானிருக்கும்


ramesh
ஜூலை 16, 2025 17:43

எடப்பாடியாரே தாங்கள் சொன்னது அனைத்தும் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது . நீங்கள் உங்களை mgr , ஜெயலலிதா என்று கற்பனை செய்து கொண்டு பேசுகிறீர்களா ? உங்கள் கட்சி தேய்ந்து அதில் இருந்து பலர் விலகி பிஜேபி உள்பட பல கட்சிகளில் சேர்ந்து விட்டார்கள் .தற்போது உங்கள் ஒட்டு சதவீதம் 18 %மட்டுமே அதனால் தான் உங்களிடம் கூட்டணி வைத்தாலும் நான் தான் முதல்வர் என்கிறார் விஜய் . உங்களை கீழே தள்ளி விட்டு பிஜேபி உதவியுடன் முதல்வர் ஆகும் கனவில் இருக்கிறார் வேலுமணி


vivek
ஜூலை 16, 2025 21:10

ரமேஷு ரம்பம் போடாம விசிக கேட்ட 25 சீட்டு குடுப்பியா?


ramesh
ஜூலை 16, 2025 22:32

வெற்றி பெற போகும் dmk கூட்டணியில் தான் இருப்பாரே ஒழிய வெற்றி பெறாது என்று தெரிந்தும் உங்கள் கூட்டணியில் வந்து சேர அரசியல் அறிவு இல்லாதவர் அல்ல திருமா வளவன் . குறைந்த சீட்கள் கிடைத்தாலும் வெற்றி உறுதி என்பது அவருக்கு தெரியும் . உங்களிடம் வந்தால் 50 சீட் கொடுப்பார்கள் என்றும் தெரியும் . ஒன்றில் கூட வெற்றி பெற முடியாது என்பதையும் அறிவார் ...


karthik
ஜூலை 16, 2025 17:37

bye bye stalin


முக்கிய வீடியோ