உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒருமையில் பேசுகிறார்: நிதித்துறை சிறப்பு செயலரை கண்டித்து தலைமை செயலக ஊழியர்கள் போராட்டம்

ஒருமையில் பேசுகிறார்: நிதித்துறை சிறப்பு செயலரை கண்டித்து தலைமை செயலக ஊழியர்கள் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நிதித்துறை சிறப்பு செயலர், ஒருமையில் பேசுவதாக கூறி, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் நிதித்துறை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நிதித்துறை சிறப்பு செயலராக இருப்பவர் அருண் சுந்தர் தயாள். இவர், தங்களை ஒருமையில் பேசுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், 400க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அவருக்கு எதிராக நிதித்துறை செயலாளரிடமும் புகார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Nalla Paiyan
ஜூலை 10, 2025 07:22

இன்று நிதித்துறை சிறப்பு செயலாளரை எதிர்த்து போராடும் அரசு ஊழியர்கள் தங்களிடம் வரும் பொது மக்களையும் மரியாதையுடன் நடத்த கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவர்களும் பொது மக்களை மரியாதைக் குறைவாக தான் பேசுகின்றனர். உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா...


Vasudeva
ஜூலை 09, 2025 11:15

இந்திய நாட்டின் அரசியலமைப்பின் முக்கியமான ஒரு முக்கியமான அங்கமான ஐஏஎஸ் ஐபிஎஸ் களுக்கு இருக்கும் அதிகாரம் மற்றும் வரம்புகள் மிகவும் அதிகம்,மிகவும் சிறிய வயதில் அதிகாரத்தின் உச்சாணியில் அமர்ந்தவுடன் சக ஊழியர்களை துச்சமாக நினைக்க இந்த அபரிமிதமான அதிகாரம்தான் காரணம்,


raja
ஜூலை 09, 2025 03:22

பேய்களின் அரசாண்டால் நரிகளுக்கும் பிணம் தின்னும் கழுகுகளுக்கு கொண்டாட்டம் தானே...


kamal 00
ஜூலை 08, 2025 22:57

போங்க போங்க விழுந்து விழுந்து வேலை பார்தது மங்கிஸ ஆட்சி கட்டிலில் அமர்த்திய உங்களுக்கு நல்லா வேணும்.... ஐயா நிதித்துறை செயலரே பச்சை மட்டய எடுத்து சாத்துங்க


Bhaskaran
ஜூலை 08, 2025 21:21

இவங்க வேலை அவ்வளவு நல்லா பாக்குறாங்க போலிருக்கு


Ram
ஜூலை 08, 2025 21:09

திராவிட மாடல் அரசிடம் திராவிட மாடலை பற்றி புகாரா


V GOPALAN
ஜூலை 08, 2025 20:27

These peoplecsn tolerate ponmudi speech


Ramona
ஜூலை 08, 2025 19:59

அதிகாரம் மமதை ,தலைக்கேறினால் இப்படி தான் நடக்கும்,


அப்பாவி
ஜூலை 08, 2025 19:14

ஒருமையா... எவ்வளவோ தேவலை. வாடா, போடி னு உரிமையா பேசாம இருக்காரே. சந்தோஷப்படுங்க.


உ.பி
ஜூலை 08, 2025 18:57

ஆஹா...சிறப்பான மாடல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை